For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ பட பூஜை!

01:03 PM Nov 25, 2023 IST | admin
விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ பட பூஜை
Advertisement

ந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு 'பீனிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

Advertisement

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, "நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும்
இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்" என்றார்.

Advertisement

செய்தியாளர்களிடம் சூர்யா பேசும்பொழுது, “ஒருநாள் அப்பா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவருக்கு சாப்பாடு கொடுக்க போனேன். அப்போது அப்படி அனல் அரசு மாஸ்டர் கண்ணில் பட்டுவிட்டேன். அதன்பிறகு இந்தப் படம் அமைந்தது. எனக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு நல்லப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.அப்பா வேற, நான் வேற. அவருடைய பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன். அதனால்தான், படத்தில் கூட சூர்யா என என் பெயரை மட்டும்தான் பயன்படுத்தச் சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்றுக் கேட்டால் அதைப் போக போக பார்த்துக் கொள்ளலாம். அப்பா மலேசியாவில் ஷூட்டிங்கில் உள்ளதால் இங்கு கலந்துகொள்ள முடியவில்லை. காலையில் எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்” என்றார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

Tags :
Advertisement