For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

08:38 AM Nov 22, 2023 IST | admin
குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி
Advertisement

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்க, இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  பத்திரிகையாளரும், ஆண்டவன் கட்டளை பட கதாசிரியருமான அருள் செழியன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

Advertisement

படத்தை படத்தை இயக்கியுள்ள டி.அருள்செழியனிடன் பேச்சுக் கொடுத்த போது, ``இது யதார்த்தமான சமூக நையாண்டி படம்.யோகிபாபு, வளைகுடா நாட்டில் ஒட்டகம்
மேய்ப்பவர்.தனது தாய் இறந்துவிடுவதால் ஊருக்கு வருகிறார்.அதுவரை அவர் உடலை ‘பிரீஸர் பாக்ஸி’ல் வைத்திருக்கிறார்கள். அந்த பாக்ஸை கொண்டு வரும் விதார்த்துக்கும் அந்த ஊர்க்காரர்களுக்கும் பிரச்சினை ஒன்று ஏற்படுகிறது. ஊருக்கு யோகிபாபு வரும் வரை அவர் காத்திருக்கிறார். பிறகு என்னநடக்கிறது என்பது படம். கதை மலைக்கிராமம் ஒன்றில் நடக்கிறது. ‘ப்ரீஸர் பாக்ஸ்’ பின்னணியில்தான் கதை நகரும். இதன் பின்னணியில் உருவானமுதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் ‘குடியிருந்த கோயில்’ என்று பெயர் வைக்க நினைத்தோம்.அதைச் சுருக்கி ‘குய்கோ’ என்று வைத்துள்ளோம்.~ என்றார்

Advertisement

இப்படம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement