விஜய் அரசியல் - எச்சரிக்கை ரிப்போர்ட்!
சினிமா ஹிரோக்கள் ஆட்சிக்கு வருவது எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்த ஃபார்முலா என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அது அமெரிக்கா தொடங்கிய அரசியல் யுக்தி, அதை தமிழகத்தில், ஏன் இந்தியாவில் கொண்டு வந்தது எம்ஜிஆர் என்றால் மிகையில்லை. அது பின்பு விரிந்தது. தமிழகத்தில் அதற்கு பின்பு சிவாஜி,ராஜேந்தர், பாக்யராஜ் என்று பலர் அதை முன்னெடுத்து தோல்வி அடைந்த போது, அதை ஓரளவு மீண்டும், இன்னும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றளவில் கொண்டு சென்றது விஜயகாந்த். அதற்கு பின்பு ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது புஸ்வானமாகிப்போனது.
அடுத்த எதிர்பார்ப்பது விஜயின் அரசியல் பிரவேஷம். அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொன்னால் தவறு. அது அவரின் மீது உள்ள வெறுப்பில் வந்த நிகழ்வாகி விடும். அந்த தாக்கம் வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல முடியாது, அதனால் முடிவில் தோற்று போவதற்கான வாய்ப்புகளே அதிகம்! காரணம் என்ன?நாம் நினைப்பது போல அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு முக்கிய தேவை பணம். அந்த பணம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
நடிகர்களிடம் இல்லாத பணமா என்று நினைக்காதீர்கள்!? ஒரு தொகுதிக்கு குறைந்தது 2 கோடி என்றால் 500 கோடி செலவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன்பு செய்யும் செலவுகள், மாநாடுகள் எல்லாம் சாதாரண விஷயமல்ல.விஜய் வைத்திருக்கும் 1500 (வாய்ப்பு குறைவு) கோடி சொத்துக்கள் எல்லாம், ஒரே தேர்தலில் காணாமல் போய்விடும். இன்று அண்ணாமலை, ரஜினியின் குடையின் கீழ் வந்திருந்தால், கண்டிப்பாக இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது.
ஏனெனில் முதல் காரணம் பணம், அடுத்து பணபலம் மட்டுமல்ல,மத்திய அரசின் ஆட்சி பலம் இருந்தும், திமுக அரசு இத்தனை செய்கிறது என்றால், இல்லாவிட்டால் என்ன செய்திருக்கும்? அதையும் மீறி கிடைக்கும் செலவுகளுக்கு பின்னால் இருப்பவர்கள், உதாரணமாக சர்ச் போன்ற இடங்களில் இருந்து விஜய்க்கு ஆதரவு வரலாம். ஆனால் அதுவெல்லாம் முதலில் சிறியளவிலும்,நிரூபிக்கப்பட்ட பின்னர்தான் பெரியளவிலும் வ(ள)ரும். ஆனானப்பட்ட ஆளும் திமுகவின் தேர்தல் நிதி சோர்ஸ்களே செந்தில் முதல் ஜெகத், வேலு வரை அடிவாங்கும் நிலையில், மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை தாங்கும் அளவிற்கு விஜய்க்கு பண பலம் செல்வாக்கு உண்டா?ரசிகர் பலர், சினிமா டிக்கெட் வாங்குவதற்கே அப்பாக்களை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கும் ரசிகர்களால் என்ன செலவு செய்ய முடியும்?
அதையெல்லாம் மீறி வெற்றி பெற வேண்டும் என்றால் முதல் தேர்தலிலேயே ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்தால் தான் வாய்ப்பு. அப்படி இல்லாவிட்டால்,இருக்கும் சொத்து காலியாகிவிடும் என்பதால்தான் ரஜினியின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதுபோல விஜய்-யின் வீட்டிலும் இருக்கும். அது மட்டுமல்ல, அரசியல் என்பது புலிவால், பிடித்துவிட்டால் விட முடியாது!
அது தவிர, திமுக பல மோசமான வேலைகளை செய்து பிளாக் மெயில் செய்யக்கூடியது.அது எந்த நிலையிலும் அதை அனுமதிக்காது எனும்போது, ஆளும் கட்சியாக இருக்கும்போது அனுமதிக்குமா? சுருக்கமாக சொல்லப்போனால், அண்ணாமலை இன்று தனியாக கட்சி தொடங்கி இருந்தாலோ, அல்லது ரஜினி பின்னால் நின்றிருந்தாலோ, இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? இதுவரை தாக்கு பிடித்திருக்க முடியுமா?எனவே அரசியல் என்பது மிகப்பெரிய பண பலம், அதிகார பலம் இல்லாமல் சாதிக்க முடியாது. அந்தளவிற்கு பணபலம் யாரிடமும் இங்கே இல்லை. அதை மீறி யார் அரசியலுக்கு வந்தாலும், ஹீரோக்களை ஜீரோக்களக்கி தெருவில் நிறுத்தி விடுவார்கள்.