தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விதார்த் - யோகி பாபு நடிப்பில் ரிப்போர்ட்டர் அருள்செழியன் டைரக்‌ஷனில் 'குய்கோ' அப்டேட்!

08:48 PM Nov 01, 2023 IST | admin
Advertisement

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Advertisement

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியரும், முன்னாள் நிருபருமான அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

Advertisement

யோகிபாபு மலையப்பன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மலையடிவார கிராமத்திலிருந்து சவுதி சென்று ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபு தன்னுடைய தாயின் உயிரிழப்புக்கு ஊருக்கு வருவதும்; அதற்கிடையே தாயின் சடலத்தை ப்ரீசர் பாக்ஸில் வைக்க ஏற்பாடு நடப்பதும் அதில் விதார்த் வருவதும்; கடைசியில் யோகிபாபுவுக்கு அந்த ப்ரீசர் பாக்ஸ் எவ்வளவு முக்கியம் என்ன மாதிரியான திருப்புமுனையை ஏற்படுத்துகிறது என்ற ரீதியில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் போஸ்டர், டீஸர், டிரைலர் மற்றும் பாடல்களை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் மாதம் குய்கோ படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

Tags :
Arulchezhiankoikorole ReporterupdateVidharthyogi babu
Advertisement
Next Article