தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமெரிக்கா:சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து விபத்து!-வீடியோ!

04:57 PM Mar 26, 2024 IST | admin
Advertisement

மெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற மிகப்பெரிய பாலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை சிங்கப்பூர் கொடியுடன்டாலி என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கையின் கொழும்பு நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2.6 கி.மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன. இந்த சம்பவத்தில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து கொண்டது. பின்னர் அது நீரில் மூழ்கியது.

Advertisement

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறை அதிகாரிகளும் நிலைமை பற்றி அறிந்து கொள்ளவும், மீட்பு பணி மேற்கொள்ளவும் விரைந்து சென்றனர் .விபத்தின் போது பாலத்தில் சென்று கொண்டு இருந்த ஏராளமான கார்கள் படப்ஸ்கோ ஆற்றுக்குள் விழுந்தன. பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஷ்மோர் நகரத் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

Advertisement

இந்த விபத்து குறித்து பால்டிமோர் தீயணைப்புத் துறையின் கெவின் கார்ட்விர்ட்ஜ் கூறுகையில், "தண்ணீருக்குள் பல வாகனங்களும், ஒரு டிராக்டரும் மூழ்கி இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விபத்தில் மொத்தப் பாலமும் சரிந்துவிட்டது. தற்போதயை நிலையில் சுமார் 20 பேர் மற்றும் பல வாகனங்கள் ஆற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சுகிறோம்” என்று தெரிவித்தார்.

https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/03/tO2Yni8V9Ybk4sBu.mp4

இந்தப் பாலம் 1977-ல் திறக்கப்பட்டது. வருடத்திற்கு சுமார் 11 மில்லியன் வாகனங்கள் இதை கடக்கும் என்றும் தகவல் வருகிறது.

Tags :
Bridge CollapsesFall In WaterShip CollisionusVehiclesVideo
Advertisement
Next Article