விடாமுயற்சி -விமர்சனம்!
அஜித் படமென்றால் என்ன இருக்கும்? - மனைவி மீதான காதல் இருக்கும்
அஜித் படமென்றால் என்ன இருக்கும்? - லவ்லியான ரொமான்ஸ் மூட் சீன்கள் இருக்கும்
அஜித் படமென்றால் என்ன இருக்கும்? - ஒரு ஆண்மகனின் பொறுப்புணர்ச்சி இருக்கும்
அஜித் படமென்றால் என்ன இருக்கும் - ஸ்டைலிஷான வாழ்க்கை முறை, ரிச்சான லொகேஷன் இருக்கும்
அஜித் படமென்றால் என்ன இருக்கும்? - ஆக்ஷன், அதிரடி இருக்கும்
அஜித் படமென்றால் என்ன இருக்கும்? - பைக் அல்லது கார் ரேஸ் & ஃபைட் இருக்கும்
அஜித் படமென்றால் என்ன இருக்கும்? - சமூக அக்கறையுள்ள மெசெஜ் இருக்கும்.- இப்படி அஜித் படமென்றால் என்னவெலலம் இருக்குமோ அத்தனை அம்சங்களும் , பத்து பொருத்தங்களும் கொண்ட படமே ' விடாமுயற்சி'!
அதாவது பத்மபூஷன் , 24H சீரிஸ் கார் ரேஸில் சாதனைப் படைத்த நாயகன் அஜித் குமார் தன் ஆசை மனைவி திரிஷாவுடன் அஜர்பைஜான் நாட்டில் வசித்து வருகிறார். 12 வருடம் தம்பதியாக வாழ்ந்த பின்னர் ஒரு சூழலில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு டைவோர்ஸ் வாங்கி பிரிய முடிவெடுக்கிறார் திரிஷா . அப்படி பிரிய முடிவெடுதற்கான காரணத்தையும், நியாயத்தையும் புரிந்துகொள்கிறார் அஜித். அத்துடன் டைவோர்ஸ் பெறும்வரை தன் அம்மா வீட்டிலிருக்க பிரியப்படும் திரிஷாவை அங்கே கொண்டு விட்டுவிடும் நோக்கி காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்களது கார் பழுதுடைந்து விடுகிறது. அப்போது அந்த வழியாக வரும் கண்டெயினர் லாரி ஒன்றில் அர்ஜூன் மற்றும் அவரது மனைவி ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் உதவி செய்வதாக கூறி திரிஷாவை அருகில் உள்ள ஓட்டலில் தங்க வைப்பதாகச் சொல்லி உடன் அழைத்துச் செல்கிறார்கள். கார் சரியானதும் அஜித் திரிஷாவை தேடிச் செல்ல, அவர் கடத்தப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது. யார்? ஏன் கடத்தினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அஜித், மனைவி திரிஷாவை எப்படி காப்பாற்றினார்? மீண்டும் இணைந்தார்களா? அர்ஜூன் & ரெஜினா யார் என்பதை சில பல திருப்பங்களோடு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘விடாமுயற்சி’ படக் கதை.
வழக்கம் போல் முழு மொத்த படத்தையும் தன் முதுகில் தூக்கிப் போட்டுக் கொண்டு விடாமுயற்சியையே தாங்கி பிடித்து இருக்கிறார் ஹீரோ அஜித் குமார்.அறிமுகக் காட்சிக்கான ஆடல், பாடல், ஆர்ப்பாட்டம், அலப்பறை, பஞ்ச் டைலாக், பில்டப் என எதுவுமே இல்லாமல் படு கேஷூவலாஜ இண்ட்ரோ ஆகும் போதே அட சொல்ல வைத்து விடுகிறார். அத்துடன் லவ் வழக்கம் போல் லவ் , ஃபேமிலி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் தனது டிரேட் மார்க் ஆக்டிங் மூலம் அதகளப்படுத்தி அப்ளாஸ் வாங்கி விடுகிறார்.திரிஷா வயதையும் தாண்டி செம அழகாக இருக்கிறார். ஆசை கணவனை பிரிவது, தனக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதை அதே அன்பானிடம் கண்ணியமாக தெரிவிப்பது என்று கிடைத்த ரோலின் வெயிட்டை சரியாக புரிந்து டீசண்டாக நடித்து மனதில் ப்ப்சகென்று ஒட்டிக் கொள்கிறார்
சைக்கோ வில்லன் கேரக்டரில் வரும் அர்ஜூன் ரோல் ஆரம்பத்தில் கவர்ந்தாலும், இண்டர்வெல்லுக்கு பிறகு அவருக்குப் பெரிய வேலை இல்லாமல் போய் விட்டாலும், படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ஆனால் ரெஜினா கசாண்ட்ரா இதுவரை கமிட் ஆகாத வித்தியாச ரோலின் வெயிட் அறிந்து சிறப்பாக செய்திருக்கிறார்.ஆரவ், ரம்யா சுப்பிரமணியம், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை பர்ஃபெக்ட்டாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு நாயகன் என்றால் அது கேமராமேன் ஓம் பிரகாஷ்-தான். படத்திற்கு மிகப்பெரிய பலமாக உழைப்பை போட்டிருக்கிறார் இவர். நம்ம அப்பளக் கம்பெனி (அதாங்க விகடன்) ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டர் இந்திய தூதராக இருக்கும் அஜர்பைஜான் சாலைகளின் ஆபத்தையும், அழகையும் ஒரே ஃப்ரேமில் காட்சிப்படுத்தியிருப்பவர், ஆள் அரவமற்ற சாலைகளின் பயணத்தையும் ஒவ்வொரு ரசிகனையும் பதற்றத்துடன் பார்க்க வைப்பதில் ஜெயித்து விடுகிறார்.!
ஸ்டண்ட் சீன்களை வடிவமைத்திருக்கும் சுப்ரீம் சுந்தரின் ஒர்க் இந்த விடாமுயற்சியின் தரத்தை சிலபல உயரங்கள் அதிகரிக்கச் செய்திருக்கிறது. அதிலும், காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை மிக நேர்த்தியாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
2கே கிட்ஸூகளின் பல்ஸ் அறிந்த மியூசிக் டைரக்டர் அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ரகம். பின்னணி இசையில் இந்த படத்தை எந்த அளவுக்கு இம்ப்ரூப் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தூக்கிப் பிடித்து குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டலான இசையை கொடுத்து தியேட்டரில் விசில் சத்தத்தின் மூலம் அதிர செய்வதில் திருப்தி அடைய முடிவு செய்ததன் நோக்கம் சக்சஸ்.
அதே சமயம் நம்ம தல அஜித்துக்கு நன்றாகக் கார் ஓட்ட தெரியும் என்பதற்காகவே ஏகப்பட்ட கார் சண்டைக் காட்சிகள் வைத்திருப்பது அப்பட்டமாக்த் தெரிகிறது. அத்துடன் 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த அஜித் - திரிஷாவின் பிரிவுக்கான காரணத்தை இன்னும் கொஞ்சம் டீப்பாகச் சொல்லி இருக்கலாம். அதை விட 'யார் அந்த பிரகாஷ்? என்று வாய் விட்டு கேட்க வைத்து விட்டதும் மைனஸ். நாயகன் அஜித்தை தவிர அவர் ஒய்ஃப் உள்பட எல்லோரும் ஏதோவொரு விதத்தில் கெட்டவர்கள் என்ற மனநிலையை ஏற்படுத்தவென்றே திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நாயகன் அஜித்தை பூமர் அங்கிள் என்று வரை விட வயசான அர்ஜூன் சொல்வதும், ஆரவ் மட்டமாக பேசுவதும் சினிமா என்றாலும் கூட ரசிக்க முடியவில்லை.
மொத்தத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் படமாகவும் இல்லாமல் கோலிவுட் இராமானுஜம் என்று பேர் எடுத்த மகிழ்திருமேனி படமாகவும் இல்லாமல் தல ஃபேன்ஸ் படமாக பக்காவாக வந்துள்ளது.
மார்க் 3.25/5