For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் - ரூ.951 கோடிக்கு கைப்பற்றியது வயாகாம் 18

05:09 PM Jan 16, 2023 IST | admin
மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்   ரூ 951 கோடிக்கு கைப்பற்றியது வயாகாம் 18
Advertisement

களிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு முதல் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு 2023 முதல் 2027 வரை செய்துகொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.951 கோடிக்கு டிவி ஒளிபரப்பு உரிமம் ஏலம் போனது. வயாகாம் 18 நிறுவனம் உரிமத்தை கைப்பற்றியது. ஒரு ஐபிஎல் ஆட்டத்திற்கு ரூ.7.09 கோடி உரிமக் கட்டணம் என்ற விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.

Advertisement

மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் சீசன்கள் 2023 - 2027க்கான ஊடக உரிமைகளுக்கான டெண்டருக்கான ("ITT") அழைப்பை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ஒளிபரப்பு உரிமைகளுக்கான வெற்றிகரமான ஏலதாரர்களை நிர்ணயம் செய்வதற்கான ஏல செயல்முறை இன்று நடத்தப்பட்டது. அதில் வயாகாம் 18 நிறுவனம் வெற்றி பெற்றது.

Advertisement

இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட பகிர்வில், "வாழ்த்துகள் வயாகாம் 18. பிசிசிஐ மற்றும் இந்திய மகளிர் அணி மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி. அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2023-27) ரூ. 951 கோடிகளுக்கு உரிமத்தை பெற்றுள்ளீர்கள். இது மகளிர் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய விஷயமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஸ்னி, சோனி, ஜீ ஆகிய நிறுவனங்களும் ஏலத்தில் போட்டி போட்டன. தொடக்க மகளிர் ஐபிஎல்லில் ஐந்து அணிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் மார்ச் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement