தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

’வேட்டையன்’ -விமர்சனம்!

09:04 PM Oct 10, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் வணிக மயமாகி விட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்களின் அடாவடிக் கொள்ளைப் போக்கையும், இன்றைக்கும் சரி என்றும் தப்பு என்ற வாதத்தையும் கிளப்பும் என்கவுண்டர் சர்ச்சையையும் ஒரே நூலில் கோர்த்து பரவாயில்லை என்ற டயலாக்கை சொல்ல வைத்து விட்டது வேட்டையன் யூனிட். அதே சமயம் இது டைரக்டர் படமாகவும் இல்லாமல், ரஜினி படமாகவும் இல்லாமல் போய் விட்டதும் சோகம்தான் என்றாலும் தமிழ் திரையில் இதுவரை சொல்லப் படாட டாபிக்கை கையில் எடுத்தமைக்கே ஒரு பாராட்டு விழா வைக்கலாம்..!

Advertisement

கதை என்னவென்றால் தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டமான கன்யாகுமரியில் உயர் போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த், குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட என்கவுண்டரே சரியான வழி என்ற மனப்பான்மையுடன் உலா வருகிறார். அப்பேர்ப்பட்ட இவரது நேர்மை பற்றி தெரிந்து கொள்ளும் கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் சரண்யா (துஷாரா விஜயன்) தான் வேலை பார்க்கும் பள்ளியில் சில ரவுடிகள் கஞ்சா பதுக்கி வைப்பது பற்றி கடிதம் மூலம் ரஜினிக்கு தெரியப்படுத்துகிறார். இதனால், துஷாராவுக்கு நற்பெயர் கிடைத்து அவர் எதிர்பார்த்திருக்கும் சென்னைக்கு பணி மாறுதலும் கிடைக்கிறது. ஆனால், அப்படி சென்னை போன இடத்தில் சரண்யா தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார்? காரணம் என்ன? இந்த கொலையாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? என்கவுண்டர்தான் குற்றங்களுக்கு தீர்வா? என்பது போன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் 'வேட்டையன்'.

Advertisement

அதியன் என்ற கேரக்டர் நேமில் போலீஸ் ஆபீசராக நடித்திருக்கும் ரஜினிகாந்த், முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். இடைவேளைக்கு பின்னர் போலீஸ் என்பவவர் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து ஸ்கோர் செய்கிறார்.. அப்படியான மனநிலையுடன் அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணையும், அதில் அவர் வெளிப்படுத்தும் வேகமும் வயதுக்கு ஏற்றவாறு பொருந்தி போய் தனது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தி விடுகிறார்.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி தான் பேசும் வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

ரஜினிக்கு ஈக்வலாக “மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று போலீஸை கலாய்க்கும் ரோலில் நல்ல திருடனாக நடித்திருக்கும் பகத் பாசில், தன்னுடைய புத்திசாலித்தனத்தை கொண்டு ரஜினிக்கு உதவுவது, ரஜினி மீது பாசம் காட்டுவது, அவரை அவ்வப்போது டென்ஷன் செய்வது என சிரிக்க வைத்திருக்கிறார்.அத்துடன் “கல்வி தான் எதிர்காலம் என்று நினைக்கும் இந்தியா போல் உலகில் உள்ள பல நாடுகளில் என் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவேன்” என்று கூறிக்கொண்டு அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்க நினைக்கும் கல்வி வியாபாரியாக நடித்திருக்கும் ராணா டக்குபதி இந்த ரோலுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, போட்டி போட்டு நடித்திருக்கிறார்..

ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியருக்கு பெரிய ஸ்கோப் இல்லை..ஆனால் சேட்டன் பாடலில் பலே சொல்ல வைத்து விடுகிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் ஆக்சனில் அட்டகாசம் செய்து கைத்தட்டல் வாங்க்கி விடுகிறார். கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சராக நடித்திருக்கும் துஷாரா விஜயன் தன் பாத்திரத்தின் வலுவை சரியாக புரிந்து நிறைவாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்‌ஷன் என்று படத்தில் பலரும் தப்பு செய்யாமல் வந்து போகிறார்கள்.

கேமராமேன் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் பலக் காட்சிகள் பலே சொல்ல வைக்கிறது. அனிருத் இசையில் மெஹா ஹிட்டடித்த ‘மனசிலயோ’ ப்பச்சக். கூடவீ கதையின் போக்கில் வரும் மென்மையான இரண்டு பாடல்கள் எந்தத் தொந்தரவையும் தராமல் காட்சிகளின் நோக்கத்தைக் கடத்துகின்றன. பின்னணி இசையிலும் தனிக் கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.

சமூக அக்கறையுடன் ஒரு புது படைப்பை வழங்க முடிவு செய்த  டைரக்டர் ஞானவேல், ரஜினி என்ற மகாபிம்பத்துக்காக வேண்டாத காட்சிகள் பலவற்றை திணிக்காமல் இருந்திருந்தால் இந்த வேட்டையன் இன்னும் கொண்டாடப்பட்டிருப்பான்..

ஆனாலும் - பாஸ் மார்க்குக்கு மேல் வாங்கி விடுகிறார்கள்

மார்க் 3.25/5

Tags :
'LycaAmitabh BachchanAnirudhRajinikanthreviewSubaskaranT.J. GnanavelVettaiyanவிமர்சனம்வேட்டையன்
Advertisement
Next Article