For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

'வெப்பம் குளிர் மழை' - விமர்சனம்!

05:17 PM Mar 29, 2024 IST | admin
 வெப்பம் குளிர் மழை    விமர்சனம்
Advertisement

குழந்தையின்மை பிரச்சனை இந்தியாவில் அண்மைக் காலமாக கவலைக்குரிய பிரச்சனையாக மாறிவருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் அச்சுறுத்தும் வேகத்தில் இப்பிரச்சனை வளர்ந்துவருகிறது. குழந்தை பேறுக்கு முயற்சிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 25கோடி பேரில் 1கோடியே 30 லட்சம் முதல் 1 கோடியே 90 லட்சம் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாத அதாவது கருத்தரிக்க இயலாத பிரச்சனையை எதிர்கொண்டிருப்பது தனியார் மருத்துவமனை உன்ற நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில் இது போன்ற குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லும் படம்தான், ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம். ஹாஸ்டக் f d f s நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. பாஸ்கல் வேதமுத்து என்பவர் இப்படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார்.

Advertisement

சிவகங்கை டிஸ்ட்ரிக்கில் உள்ள ஒரு வில்லேஜில் வாழும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் மேரேஜ் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதை அடுத்து, ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் - இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள்.இத்தகைய பேச்சுக்களால் கஷ்ட்டப்படும் தம்பதி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி இருவரையும் பரிசோதித்ததில் ஹீரோ திரவுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது. ஆனால், இந்த விசயத்தை கணவரிடம் சொல்லாமல் மறைக்கும் இஸ்மத் பானு, அதே சமயம் குழந்தையின்மை பிரச்சனையால் தனது கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார். அந்த முடிவால் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, சில வருடங்களில் அந்த குழந்தையாலேயே தம்பதி இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? என்பதை தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மையமாக கொண்டும், அதற்கான அறிவியல் தீர்வையும், அதை ஏற்றுக்கொள்ள தயங்கும் மக்களுக்கு அறிவுரையாகவும் சொல்வதே ‘வெப்பம் குளிர் மழை’ படக் கதை,

Advertisement

மெயின் ரோலில் வரும் திரவ், முதல் படத்திலேயே மிக அழுத்தமான ரோலில் ஃபர்பெக்டாக நடித்திருக்கிறார். மனைவியுடனான ரொமான்ஸ், ஊர் மக்களின் பேச்சால் அப்செட் ஆகி கலங்குவது, தனது தவறை நினைத்து கதறி அழுவது, மனைவி தனக்கு தெரியாமல் செய்த காரியத்தால் தவிப்பது, என்று சகல உணர்வுகளையும் சரியான நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கும் திரவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். ஏகப்பட்ட படங்களில் தக்கனூண்டு வேடங்களில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, முதல் முறையாக நாயகியாக நடித்திருக்கிறார். பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு தனது இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். அவருடைய நடிப்பு மட்டும் இன்றி, வசன உச்சரிப்பு, உடல் மொழி என தனது ஒவ்வொரு அசைவுகளின் மூலம் கதை நடக்கும் கிராமத்து பெண்ணாகவே வலம் வருகிறார்.

திண்ணையில் உட்கார்ந்து நையாண்டி செய்யும் கிராமத்து தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பழைய தலைமுறையின் ஆரோக்கியம் மற்றும் கவலை இல்லாத வாழ்க்கையை பிரதிபலிக்கிறார். மாமியாராக ரமா தன் பங்குக்கு மருமகளுடன் சண்டையிட்டு காட்சியை வெப்பமாக்குகிறார்.படத்தில் வரும் இன்னும் பல்வேறு கதாபாத்திரங்கள் கிராமப்புறங்க ளில் ஊர் மக்கள் அன்றாடம் பார்க்கும் நபர்களின் நடமாட்டம்.

கேமராமேன் பிரித்வி ராஜேந்திரனின் கேஷூவலான ஒளிப்பதிவு, எளிமையான கிராமத்தை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது. சங்கர் இசையில், திரவின் வரிகளில் பாடல்கள் அனைத்திலும் கிராமத்து வாசம் வீசுவதோடு, புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதையோட்டத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது.

ஹைலி சென்சிட்டிவான ஒரு சப்ஜெக்டை எடுத்து சரியான நடிகர்களை தேர்வு செய்து படத்தை எடுத்ததற்காக பாராட்டலாம். குழந்தை இல்லாத பிரச்னை என்ற ஒரு விஷயத்தை மையப்படுத்தியே படம் நகர்கிறது. தேவையற்ற காட்சிகள் ஒன்று கூட இல்லை என்பதே முழு படத்தின் பலம். இவ்வளவு அறிவியல் வளர்ந்த பின்பும் குழந்தை இல்லாத பிரச்னைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் கிராமத்தில் அதிகம் என்று எந்தவித சமரசமும் இல்லாமல் சொல்கிறார் இயக்குநர். மலடி என்ற வார்த்தையே பெண்மையை அவமதிக்கும் சொல் என்பதை உணர வைப்பதில் ஜெயித்து விடுகிறார்கள். அதே சமயம் ஒரு சில புரிதல்கள் டைரக்டருக்கு இருந்தாலும் அதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சிகளில் விளக்கம் அளிக்காதது குறைதான்.

மொத்ததில் இந்த வெப்பம் குளிர் மழை - கோலிவுட்டுக்கு வந்த இன்குபேட்டர்

மார்க் 3.5/5

Tags :
Advertisement