வட்டார வழக்கு - விமர்சனம்!
அதிநவீனமாகிக் கொண்டிருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில் மொழி, பேச்சு, எழுத்து என இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. எழுத்து வடிவத் திற்குச் சில கட்டுப்பாடுகள் இருக் கின்றன. ஆனால் பேச்சுக்கு எல்லைகள் இல்லை ஆக பேச்சு வடிவத்தில் மொழி அதன் அத்தனை சாத்தியங்களையும் கண்டடைய முயலும். ஒவ்வொரு பகுதிக்கும் தமிழ் ஒரு தனித்த மொழி வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை வட்டார வழக்கு என்கிறோம் .. வாய்மொழி – வட்டார இலக்கியம் என்பது பொது சொத்து. இவர்தான் உருவாக்கினார். இந்தக் காலத்தில், இந்த சூழலில் உருவாக்கப்பட்டது என்ற வரலாறு இல்லை. இவர்தான் பயன்படுத்த வேண்டும். இந்த சாதியினர்தான், இந்த வயதிலுள்ளவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை ஏதும் கிடையாது. வட்டார – வாய்மொழி இலக்கியம் என்பது – சமுத்திரம். அதில் அவரவர் சக்திக்கேற்ப, தேவைக்கேற்ப அள்ளிக்கொள்ளலாம். யார் அள்ளினாலும் கைப்பிடி நீரைத்தான் அள்ள முடியும். கடலிலிருந்து கைப்பிடி அளவு நீர். ஆத்து நிறைய தண்ணீர்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும். இதுதான் வாய்மொழி – வட்டார வழக்கின் வனப்பு. இன்று வரை அலச வைத்துக் கொண்டிருக்கும் இந்த வட்டார வழக்கு என்ற பெயரில் வழக்கம் போல் பங்காளிக்களுக்குள் வன்மமும், ஆக்ரோஷமும் கொண்ட குடும்பத்தினர்,, அவர்களின் லொலி, பழிவாங்கல் என வழக்காமான, அழுத்தமில்லாத திரைக்கதையுடன் வெளிவந்து ஏமாற்றி விட்டது.
அதாவது மதுரை அருகே வெயில் காயும் கிராமம் ஒன்றில் ஒரே ஜாதியை சேர்ந்த கண்ணுசேர்வை(விஜயகுமார்) குடும்பத்துக்கும், பூதனன் சேர்வை(விஜய் சத்யா) குடும்பத்துக்கும் தீராப் பகை. பணவசதி படைத்த பூதனன் சேர்வைக்கு நிகராக கண்ணு சேர்வையும் வளர முயற்சிக்கும்போது ஆரம்பிக்கும் பகை, தலைமுறை தாண்டி தொடர்கிறது. அதிலும் கண்ணு சேர்வையின் மகன் சேங்கை மாறன்(சந்தோஷ் நம்பிராஜன்) பயங்கரமான சூடு பார்ட்டி.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிதடி வெத்துகுட்டு என்ரு பயணித்து கொண்டிருக்கிறான். மற்றொரு பக்கமும், அந்த பக்கமும் சில கொலைகள், வழக்குகள் என்று போகும் திரைக்கதையின் இடையில் மலர்கிறது சேங்கை மாறனின் காதல். பிறகென்ன பருத்தி வீரன் பாணியில் ஆயிரத்து சொச்ச நாயகியாக வந்து ஜெயிலும், பெயிலுமாய் அலைகிற சேங்கை மாறனை உயிராக காதலிக்கிறாள் தொட்டிச்சி (ரவீனா ரவி). அடுத்தடுத்து ரத்தம் பீய்ச்சி அடித்த பிறகும் பகை முடிகிறதா? பகைக்கு இடையில் மலர்ந்த காதல் நிறைவேறுகிறதா? என்பதுதான் இந்த வட்டார வழக்கின் கதை..!
இப்படி வெயிட் இல்லாத கதைக் களமாக்கி உருவாக்கிய திரைக்கதைக்கும் போதிய சத்தில்லாததால் வந்து போகும் நடிக, நடிகைகள் யாருமே சோபிக்கவில்லை. சென்சார் கட் செய்யப்பட்டு பீப் போட்ட நிறைய உரையாடல்களை நம்மால் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை என்பதுடன் நான் வாழ்ந்த கீர்த்திய சொல்லுறன் அண்டை வீட்டுக்காரன் நிக்கிரானா பார்.., ,கல்யாண வீட்டுப் பந்தக்காலை கட்டிக்கிட்டு அழுவுறவன் எழவு வீட்டை கண்டா விடுவானா?.,அறுவடைக்காலத்துல எலிக்கு அஞ்சிய பெண்டாட்டிகளாம்..,ஆயிரம் ரூபா கையில இல்லாததால பத்துரூபா வட்டி நட்டமாப் போச்சின்னானாம்...,மொட்டைத்தலையில பேய்பிடிச்சா இருக்கிறத வச்சித்தாம் ஆடணும். என்ற பாணியில் மதுரை கிராமத்து வட்டார வழக்கில் வரும் நையாண்டி வசனங்களை மட்டுமே நம்பி ஒப்பேற்றி இருப்பதால் சலிப்பே வருகிறது.
இளையராஜாவின் ஆரம்பக் கால இசை படத்தை கொஞ்சம் கவனிக்க வைக்கிறது..!
மற்றப்படி சாதி..,சாதி,கொலை.,கொலை என்று ரத்த வாடை எடுக்கும் பட்டியலில் இன்னொரு படமிது!
மார்க 2/5