தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வருமான வரித்துறை(மும்பை)யில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!

05:15 PM Jan 09, 2024 IST | admin
Advertisement

ருமான வரித்துறை மும்பை பிரிவு, இன்ஸ்பெக்டர், எம்.டி.எஸ். மற்றும் பிற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 19, 2024 ஆகும். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Advertisement

பணி விவரம்

இன்ஸ்பெக்டர் - 14

Advertisement

வரி உதவியாளர் - 119

ஸ்டெனோக்ராபர் க்ரேட் 2 - 18

பன்முக உதவியாளர் - 137

கேன்டீன் உதவியாளர் - 03

மொத்த பணியிடங்கள் - 291

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் incometaxmumbai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

எந்தெந்த விளையாட்டு பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை அறிய ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

கல்வித் தகுதி

இன்ஸ்பெக்டர், டேக்ஸ் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கேண்டீன் உதவியாளர், பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-வது அல்லது 12-வது படித்திருக்க வேண்டும்.

ஸ்டேனோக்ராபர் பணிக்கு 12-வது தேர்ச்சியுடன் அதற்கு சம்பந்தப்பட்ட சான்றிதழ் படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டுத் துறையில் மாநில / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு

மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.02.2024

வேலைவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்களுக்கு https://mumbai-itax-sportsrecr23.com/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Tags :
CACanteen AttendantIncome Tax MumbaiInspector of Income TaxitITImtsMTS Recruitment 2024Multi Tasking StaffSports PersonsStenoStenographer Grade-IITATax Assistant
Advertisement
Next Article