தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்!

01:37 PM Dec 21, 2023 IST | admin
Advertisement

ண்டுதோறும் மார்கழி மாதம் வளர்பிறையின் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைணவர்களின் மிக முக்கியமான, மிகவும் புண்ணியம் தரும் விரத நாள் ஏகாதசி ஆகும். வருடத்தின் மற்ற மாதங்களில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் பலனை பெற்று விட முடியும். அது மட்டுமல்ல அவர்களின் அனைத்து பாவங்களும் நீங்கி, அவர்களுக்கு வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டுகளாக 10 நாள் உற்சவமாக வைகுண்ட ஏகாதசி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அதிலும் இந்த ஆண்டு இந்த ஆண்டு இரு முறை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. முதல் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி ஜனவரி 2 ஆம் தேதி நடந்தது. அடுத்த வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 23ம் தேதி துவங்கி ஜனவரி 01 ம் தேதி வரையிலான 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இந்த 10 நாட்களும் பரமபத வாசல் திறந்திருக்கும். அதன் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதை ஒட்டி திருப்பதியில் நாளை முதல் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் தீரும் வரை விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாளை மறுநாள் டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.வைகுண்ட ஏகாதசி நாட்களில் 300 ரூபாய் சிறப்பு தரிசனம், வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், நாளை டிசம்பர் 22-ம் தேதி முதல் டோக்கன்கள் தீரும் வரை 90 விநியோக மையங்களில் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

திருப்பதி ரயில் நிலையம் எதிரே விஷ்ணு நிவாசம், பஸ் நிலையம் எதிரே மாதவம், திருப்பதி ரயில் நிலையத்தின் பின்புறம் கோவிந்தராஜ சத்திரம், அலிபிரி கருடன் நிலை அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், மஹதி அரங்கம் அருகே உள்ள ராமசந்திரா புஷ்கரணி, மார்க்கெட் அருகே உள்ள இந்திரா மைதானம், ஜீவகோனா உயர் நிலைப்பள்ளி, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி, ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி, எம்.ஆர் பல்லி ஆகிய 9 இடங்களில் 90 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags :
Free TokentirupatiVaikunda Ekadasiதிருப்பதிவைகுண்ட ஏகாதசி
Advertisement
Next Article