புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி- முதற்கட்ட சோதனை வெற்றி!
புற்றுநோய் செல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, ஒரு அற்புதமான தடுப்பூசி அதன் முதல் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.இந்த தடுப்பூசி மடார்னா பார்மாசூட்டிகல் (Moderna Pharmaceuticals) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கிய எம்ஆர்என்ஏ (mRNA) நிறுவனம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது.
கோவிட்19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்கள் மற்றும் கட்டிகளை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்ட சோதனையில், 8 நோயாளிகளுக்கு கட்டிகளின் வளர்ச்சி இல்லை என்பதுடன் புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பரிசோதனை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் தோபாஷிஸ் சர்க்கர் கூறியதாவது: –
புற்றுநோய் நோய் எதிர்ப்பு சிகிச்சையை மதிப்பிடுவதற்கான இந்த ஆய்வு ஒரு முக்கியமான முதல் படியாகும். புற்றுநோய்க்கு மிகவும் திறம்பட சிகிச்சை அளிக்க உதவும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதையும் நாங்கள் நிரூபித்துள்ளோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று மிக விரைவில் தெரியவரும். இந்த தடுப்பூசிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.