For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாழை - விமர்சனம்!

05:15 PM Aug 23, 2024 IST | admin
வாழை   விமர்சனம்
Advertisement

மிழ்நாட்டு மக்களின் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை. கூடி மகிழும் விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் வாழையில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு. ஹோட்டல்களில்கூட இந்த இலையில் வைத்துக் கட்டித்தரப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம். பல நூற்றாண்டுகால மரபும் பண்பாடும் இருக்கட்டும்... இது சுகாதாரமானது; சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதையும் தாண்டி, இதன் மருத்துவக் குணங்கள் மலைக்கவைப்பவை. ஆரோக்கியப் பலன்களை அள்ளித் தருபவை! அந்த வாழை இலை விவசாயிகள் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி ஒரு கதை சொல்லி மனதை பிசைந்து அனுப்பி விடுகிறார் சர்ச்சை பேச்சு டைரக்டர் மாரி செல்வராஜ்.

Advertisement

சிறு வயதிலேயே அப்பாவை இழந்த சிவனணைந்தான் (பொன்வேல்), தன் அம்மா, அக்காவுடன் (திவ்யா துரைசாமி) வளர்ந்து வருகிறான். அவனுடைய நெருங்கிய நண்பன் சேகர் (ராகுல்). வார விடுமுறை நாள்களில் வாழைத் தார்களைச் சுமந்து செல்லும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருவருக்கும் உள்ளது. ஒரு நாள் அம்மாவை ஏமாற்றி விட்டு காய் சுமக்கச் செல்லாமல் பள்ளிக்கு சென்றுவிடுகின்றான் சிவனணைந்தான். அதே சமயம் வாழைத் தார்களுடன் தொடர்ந்து பயணிக்கும் லாரி, அதில் பயணிக்கும் மக்களை மிகப்பெரிய துயரத்தில் தள்ளுகிறது. அதை அடுத்து சிறுவன் பொன்வேல் அனுபவித்த வலியை கடத்துவதற்கான இயக்குநர் மாரி செல்வராஜின் முயற்சி தான் இந்த வாழை’ படக்கதை. இதுவரை சாதி மற்றும் தர்க்க அரசியலை முரட்டுத்தனமாகப் பேசிய மாரி செல்வராஜ்,

Advertisement

ஹீரோ லெவலில் சிவனைந்தனாக நடித்திருக்கும் சிறுவன் பொன்வேல், தனது கேரக்டரின் வலுவைப் புரிந்து வாழ்ந்திருக்கிறான். ஸ்கூலில் பூங்கொடி டீச்சர் தனக்கு பிடித்தவர் என்று சொல்லிக்கொண்டு அவருடன் ட்ராவல் செய்வது, வாழைத்தார் வெட்டும் பணிக்கு செல்ல பிடிக்காமல் பயப்படுவது, கமலை வெறுப்பது என அனைத்து இடங்களிலும் எதார்த்தமாக நடித்து, ஸாரி வாழ்ந்து அசத்தி இருக்கிறான் . சிவனைந்தனின் நண்பனாக சேகர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ராகுல், மண்ணின் மைந்தனாக கவனம் ஈர்க்கிறான். அதிலும் இந்த சிறுவனின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிக நேர்த்தி. பூங்கொடி டீச்சராக நிகிலா விமல். சிவனணைந்தானும் சேகரும் அவர் மீது கொள்ளும் மையல் ஆரம்பத்தில் நெருடலைக் கொடுத்தென்னவே நிஜம். ஆசிரியருக்கும் - மாணவனுக்கும் இந்த காட்சிகள் கொஞ்சம் பிசகியிருந்தாலும் படம் வேறு அர்த்தத்தை கொடுத்திருக்கும் சூழலில் டீச்சர் நேத்து பார்க்கும் போது என் அம்மா மாதிரி அழகா இருந்தீங்க.. இன்னைக்கு என் அக்கா மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க… இதுதான் சிவனைந்தான் டீச்சர் மீது வைத்திருந்த காதல் என்று எக்ச்போஸ் செய்து கைதட்டல் அள்ளுகிறார்கள். சிவனைந்தனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன், டீச்சராக நடித்திருக்கும் நிகிலா விமல் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திருநெல்வேலி வட்டார தமிழ் பேசி எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களை விட பின்னணி இசையில் வாழையின் தரத்தை சில படிகள் உயர்ந்து விட்டிருக்கிறார். பாடல்களில் என்னவோ கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். முந்தைய படங்களில் அசைபோட வைத்த அளவுக்கு இதில் பாடல்களை வழங்கத் தவரி விட்டார். ஆனாலும் ‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்’, பூங்கொடிதான் பூத்ததம்மா’ போன்ற பாடல்கள் சிவனணைந்தான் பாடும் காட்சிகள் என்ன ஒரு அற்புதம்! பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’ பாடலுக்கு பூங்கொடி டீச்சர் நடனம் சொல்லித் தரும் காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது

கேமராமேன் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் வாழைத்தோப்பு மற்றும் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் என அனைத்துமே மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் இவர்களது உழைப்பு என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதனாலேயே இந்த படம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. உலக சினிமாக்களுடன் போட்டி போடும் வகையில் மிகவும் தரமான படத்தை தன் ஒளிப்பதிவு மூலம் கொடுத்திருக்கிறார்.

பலருக்கும் தெரிந்த அதே சமயம் பரிட்சயமில்லாதோரின் வலி மிகுந்த வாழ்க்கை, உழைப்போரை அலட்சியமாக நடத்தி சுரண்டும் முதலாளித்துவம் போன்றவற்றை மேலோட்டமாக பேசினாலு சில இடங்களில் கைப்பேசியை நோண்ட வைப்பதையும் மறுக்க முடியாது. ஆனால் க்ளைமாக்ஸை மனதில் வைத்து அழ வைக்கவேண்டுமென்ற ஒற்றை நோக்கில் உருவாக்கி இருப்பதும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஆனாலும்தனது வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைத்திருந்தாலும் இதில் எந்தவிதமான அரசியலையும் பேசாமல், ஒரு துயரமான சம்பவத்தை வைத்துக்கொண்டு, நம் சமூகத்தில் உழைப்பாளிகளை அலட்சியமாக நடத்தும் முதலாளித்துவத்தை பற்றி மேலோட்டமாக பேசியிருக்கிறார். கூடவே , கேரக்டர்களை வடிவமைத்த விதம், நடிகர்கள் தேர்வு, கதைக்களம், க்ளைமாக்ஸ் ஆகியவை மாரி செல்வராஜூக்கு இன்னொரு வெற்றியை வழங்கி விட்டதென்பது நிஜம்.

மொத்தத்தில் இந்த வாழை - மாரி செல்வராஜின் வலி

மார்க் 4/5

Tags :
Advertisement