தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியிலிருந்து விலகினார் விவேக் ராமசாமி - ட்ரம்புக்கு ஆதரவாம்!

12:56 PM Jan 16, 2024 IST | admin
Advertisement

லக நாடுகளின் பெரியண்ணா என்ரு தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இருகட்சி ஆட்சி நடைமுறையில் இருக்கும் அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவை மத்தியில் தான் போட்டி நிலவுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி (37)-யும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கானப் பணிகளையும் மும்முரமாகத் தொடர்ந்தார். இதற்கிடையில், அமெரிக்காவின் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், 'டொனால்டு ட்ரம்ப் மோசடியாளர். எனவே இந்திய-அமெரிக்கரான எனக்கு வாக்களியுங்கள்' எனப் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

இந்த பிரசாரத்தால், விவேக் ராமசாமிக்கு எதிப்பு கிளப்பியது. இதற்கிடையில், இந்நிலையில் முதல் மாகாணமாக, ஐயோவா-வில் குடியரசு கட்சியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் டொனால்டு டிரம்ப்புக்கும், விவேக் ராமசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பரபரப்பான உள்கட்சி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவுக்கு முன்னதாக டிரம்ப் வெளியிட்ட பிரசார வீடியோ ஒன்றில், “என்னுடைய ஆதரவாளர் எனக் கூறி விவேக் ராமசாமி செய்வதெல்லாம் ஏமாற்று பிரசார தந்திரங்களின் வடிவமாக உள்ளது.அவர் மிகவும் தந்திரமாக செயல்படுகிறார். விவேக்கிற்கு வாக்கு அளிப்பது எதிர் அணிக்கு வாக்களிப்பது போன்றதாகும். இதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என கூறியிருந்தார்.

இத்தனைக்கும் விவேக் ராமசாமி டிரம்ப்பை பாராட்டியே பிரசாரங்களை செய்து வந்தார். ஆனால் டிரம்ப், விவேக் ராமசாமியை ஏமாற்று பேர் வழி என்ற ரீதியில் விமர்சித்து பிரசாரத்தை மேற்கொண்டார். இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆனால், விவேக் ராமசாமி 7.7 சதவிகித வாக்குகளைப் பெற்று 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான், அதிபர் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாக விவேக் ராமசாமி அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், ``நான் எனது இலக்கை அடையவில்லை. வெள்ளை மாளிகையில் எங்களுக்கு ஓர் அமெரிக்க தேசபக்தர் தேவை. மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்று சத்தமாகவும் தெளிவாகவும் பேசுகிறார்கள். எனவே, நான் எனது பிரசாரத்தை இடைநிறுத்துகிறேன். மேலும், டொனால்டு ட்ரம்ப்பை ஆதரிக்கிறேன். அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags :
electionpresidentialsupports Trump!usVivek Ramasamywithdraws race
Advertisement
Next Article