தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமெரிக்க அதிபர்:கமலா ஹாரிசுக்கு பில்கேட்ஸ் ஆதரவு!

05:38 PM Oct 23, 2024 IST | admin
Advertisement

மெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

Advertisement

ஆசிய–அமெரிக்கர்கள் மத்தியில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அதிகம் தென்படுகிறது. இவர்களில் 46 சதவீதம் பேர் பைடனுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். அவர் தேர்தல் களத்தில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் களம் இறங்கிய நிலையில், அவருக்கு வாக்களிக்க விரும்புவோர் சதவீதம் 64 ஆக அதிகரித்துள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags :
Harris Bill GatesKamalapresidentsupportus
Advertisement
Next Article