For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

UPI சேவைகள் செயல்படாது!

08:05 PM Nov 04, 2024 IST | admin
upi சேவைகள் செயல்படாது
Advertisement

ப்போதைய காலட்டத்தில் அதுவும் இந்தியாவின் எந்த இடத்திற்கு சென்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையானது பெரும் பங்காற்றி வருகிறது. சாலையோர கடைகளில் இருந்து மிகப்பெரிய வர்த்தக கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை இருப்பது பார்க்க முடிகிறது.

Advertisement

குறிப்பாக , கூகுள் பே, போன் பே , பே டி எம் உள்ளிட்ட செயலிகளின் வருகையை தொடர்ந்து, சாமானிய மக்கள் எளிமையாக டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதையடுத்து, ஒவ்வொரு வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்திற்குள் வர தொடங்கின.UPI மூலமாக , வங்கிகளை சொந்தமாக செயலிகளை வடிவமைத்தும் பரிவர்த்தனைகளை ஏற்படுத்தினர். இந்நிலையில், மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதாவது வம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு. இந்த பராமரிப்பு காலத்தில் HDFC வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement