உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்கும் பணி அப்டேட்!.
உத்தராகண்ட் ஸ்டேட்டில் உள, உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி நேஷனல் ஹைவேஸில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் சார்தாம் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4,531 மீட்டர் கொண்ட சில்க்யாரா சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்க சாலையானது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இதன் பண்களின் போது தான் எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தில் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுரங்கத்தை உடைத்து மீட்கும் வகையில் ட்ரில்லிங் இயந்திரம் சேதமடைந்தது. மேலும், மேலிருந்து மண் சரிவதாலும் இயந்திரங்கள் பழுதானதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, மீட்பு நடவடிக்கையில் பிரதமர் அலுவலகமும் தலையிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளது.
நாட்கள் கடந்து கொண்டே இருப்பதால் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல்நிலை பாதிப்பிற்கு ஆளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலச்சிக்கல், தலைவலி, அசதி, பதற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளன.தற்போதைய சூழலில் உணவு, தண்ணீர், ஆக்சிஜன், மருந்துகள், உலர் பழங்கள், சாதம், பாப்கார்ன் ஆகியவை தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று முறை உணவு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கான தண்ணீர் பைப்களை மீட்பு குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுரங்கத்தின் உள்ளே சிலிக்கா அதிக அளவில் இருப்பதால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நிலைப்படுத்துவது, நாடித்துடிப்பு விகிதம், ரத்த அழுத்தம் ஆகியவற்றை உறுதி செய்வதில் பெரும் சவால்கள் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் அலுவலக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடுவது, சுரங்கத்தில் புதியபாதை அமைப்பது, தொழிலாளர்களுக்கு உணவு, சத்து மருந்துகள், குடிநீர் வழங்குவதற்காக 6 அங்குல அகலமுள்ள குழாய் பொருத்துவது ஆகிய 5 அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டன.அவற்றைச் செயல்படுத்தி தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இன்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொழிலாளர்களை மீட்பதற்கான அனைத்து பணிகளையும் தீவிரப்படுத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.