For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணிவாய்ப்பு!

08:17 PM Oct 24, 2024 IST | admin
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணிவாய்ப்பு
Advertisement

த்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் வழியாகவும் நேரடியாகவும் நிரப்பபடுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி (லோக்கல் பேங்க் ஆபிசர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணி விபரம்

Advertisement

உள்ளூர் வங்கி அதிகாரி- 1500.தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன. கேரளாவில் 100 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 10 மாநிலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலை.,யில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க, 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளமாக கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு/ குரூப் டிஸ்கசன் எனப்படும் குழு ஆலோசனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.

கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ரூ.850. எஸ்.சி., எஸ்.டி, மற்றும் PwBD பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ. 175.

தேர்வு செய்யப்படுவது எப்படி:

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

தேர்வு அறிவிப்பு விபரம்

ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு - என்ற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

முக்கியமான தேதிகள்

இன்று(அக்., 24) முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

நவம்பர் 13.

Tags :
Advertisement