தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மோடி ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி அதிகரிப்பு: சர்வே ரிசல்ட் ஷாக்!

06:16 PM Apr 12, 2024 IST | admin
Advertisement

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சமூக அறிவியல் மற்றும் மனித நேய ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்டிஎஸ் அமைப்பு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பினை ஆன்லைன் வாயிலாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இந்த கருத்து புள்ளிவிவரங்களும் வாக்காளர்கள் பொருளாதார நிலை மீது கவலை கொண்டுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது என்று சிஎஸ்டிஎஸ் - லோக்நிதி (CSDS-Lokniti ) அமைப்பு தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.’சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி’ (CSDS-Lokniti ) என்ற அமைப்பு மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வேலைவாய்ப்பில்லை

’கடந்த காலத்தை விட தற்போது வேலை தேடுவது கடினமாகி உள்ளது’ என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். ஆண் – பெண் விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் 65 சதவீத ஆண்களும் 59 சதவீத பெண்களும் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதேவேளை, இந்து உயர்சாதியினர் தரப்பில் 17 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதாகவும், அவர்களில் 57 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமம் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதில் குறிப்பாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு சிரமம் இருப்பதாக 67 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்துக்கள், ஓபிசிக்கள், பட்டியலினத்தவர்களில் 63 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 59 சதவீத பழங்குடிகளும் வேலைவாய்ப்பின்மை பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் இந்து உயர்சாதியினர் தரப்பில் 17 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களில் 57 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமம் எனத் தெரிவித்துள்ளனர்.

17 சதவீதம் பேர் மாநில அரசுகளே வேலை வாய்ப்பின்மைக்குக் காரணம் என்றும் 27 சதவீதம் பேர் மத்திய அரசே அதற்குக் காரணம் என்றும், 57 சதவீதம் பேர் இரு தரப்புமே காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊழல், விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வை பொருத்தவரை மோடியின் ஆட்சியில் 71 சதவீதம் பேர் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி மிகவும் அதிகரித்துவிட்டதாகவும், முஸ்லிம்களில் 75 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னரும்கூட லோக்நிதி இதேபோல் தேர்தலுக்கு முந்தைய ஆய்வு (ப்ரீ போல் சர்வே) நடத்தியது. அப்போது இருந்ததைவிட இப்போதைய ஆய்வில் 55 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். நாட்டின் பெரும் பிரச்சினைகளில் வேலையின்மைக்கு அடுத்தபடியாக அதிகரித்துள்ள ஊழல் விளங்குகிறது.

25 சதவீதம் பேர் மத்திய அரசால் ஊழல் அதிகரித்துள்ளது என்றும், 16 சதவீதம் பேர் மாநில அரசுகளால் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் 56 சதவீதம் பேர் இருதரப்புமே எனக் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்திருப்பதாக 55 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 63 சதவீதத்தினர் விவசாயிகளுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
2024 ElectionBJP GovtModi regimeprice riseshock!Survey resultsUnemployment
Advertisement
Next Article