தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சினிமா வேறு,அரசியல் வேறு என்பதை புரிந்து கொள்,ரஞ்சித்!

01:53 PM Jul 21, 2024 IST | admin
Advertisement

ந்தியாவை பன்னெடுங்காலம் பீடித்து இருப்பதும், எளிதில் தீர்வு காண முடியாத சமூக நோயாகவும் இருக்கக்கூடிய சாதியை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்காதவர் எவரும் இல்லை. எனினும் சாதி ஒழிந்த பாடில்லை. ’சாதி ஒழிய வேண்டும்’ என்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகமான எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.அந்த வகையில் ஜாதி பாகுபாடு பார்க்கும் மனோநிலை மிகக் குறைவான சென்னையில் ஒரு சினிமா டைரக்டரின் நடவடிக்கையும், பேச்சுகளும் கொஞ்சம் பீதியை ஏற்படுத்துவதென்னவோ நிஜம்.

Advertisement

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் என்பவரின் சாவு ஆணவக் கொலையோ, அரசியல் வன்மாத்தாலோ, நீட் பிரச்சினையாலோ, சாதி வன்முறையாலோ நிகழவில்லை என்பது எவ்வளவு நிஜமோ அதே அளவு இது 'ரவுடிகளின் ஈகோ' சம்பந்தப்பட்ட ஒரு குற்றச்செயல் என்பதும் உண்மைதானே?. அந்த உண்மையெல்லாம் தெரிந்தும் கொலையானவர் வீடு தேடி அமைச்சர் சேகர் பாபு நேரில் வந்தார். கூடவே இருந்தார். மேயர் நேரில் வந்து பேசினார்.. இவ்வளவு ஏன்.. முதல்வரே வந்து ஆறுதல் சொல்லி வாக்கும் கொடுத்ததெல்லாம் பொய்யா? அல்லது கனவா? .

Advertisement

நடக்கும் விசாரணையில் பாஜக உயர் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கூட கைகாகியுள்ளார். உங்க மெட்ராஸ் கூவத்தில் சென்னைபோலீசார் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் உதவியுடன் ஒருநாள் முழுக்க நாறும் ஆற்றில் மூழ்கித் தேடி 5 செல்போன்களின் பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர். கொலையாளிகள் இந்த செல்போன்களை தான் பயன்படுத்தி வந்தனர் என்று போலீசார் கூறுகின்றனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும் பெண் தாதாவுமான அஞ்சலை வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். புளியந்தோப்பில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற போலீசார் சோதனையில் 5 செல்போன்கள், பென் டிரைவ், லேப்டாப், வங்கி பாஸ்புக், டெபிட், கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து சில பல உண்மைகள் வெளிவருகின்றன.

இச்சூழலில் இக்கொலையை வைத்து தலித் அரசியல் செய்வது தலைநகரின் பாதுகாப்புக்கு நல்லதல்ல என்பதை மட்டும் சம்பந்தப்பட்ட்டோர் உடனடியாக உணர வேண்டும் என்பதே நம் விருப்பம்.முதலில் விசாரணை நடந்து வரும் கொலையை முன்னிறுத்தி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்த போலீஸ் மீது ஒரு எஃப் ஐ ஆர் போட வேண்டும்....!

நேற்று பா.ரஞ்சித் தொடக்கத்தில் “நாங்கள் எங்கள் திறமையினால் , உழைப்பினால் முன்வந்தால் நீ ரிசர்வேசனில் வந்திருக்கிறாய் என கொச்சைப் படுத்துகிறார்கள்'' என்று பேசியவர் அப்படியே அடுத்த 5 நிமிடத்தில் சொன்னது “சென்னை மேயர் பிரியா ! நீங்க திமுகவில் இருப்பதால் மேயராக வரவில்லை . ரிசர்வேசன் மூலமாகத் தான் மேயராக வந்தீர்கள் “ என்கிறார் ஒரு 10 நிமிடம் முரண்பாடில்லாமல் பேச முடியவில்லை . சினிமா வேறு , அரசியல் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள் , ரஞ்சித் !

மேலும் தன் உரையில்' ‘‘ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்பதா? அப்படி என்றால் நாங்கள் ரவுடிகள்தான். அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்களைக் காயப்படுத்த வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல மறைமுக சூழ்ச்சிகள் இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை காவல்துறை கண்டறிய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்குக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்’’ என்றார். அத்துடன் காவல்துறையை பகிங்கரமாக எச்சரிக்கிறார்.. மெட்ராஸையே கட்டி ஆண்டோம் என்கிறார் .. இனி எங்களை மீறி ஒருவனாலும் ஆள முடியாது என்கிறார்

இதெல்லாம் தப்பு.. ரஞ்சித்.. உணர் & உணர்த்து🙏

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
amstrongdalitpa ranjithஅரசியல்ஆம்ஸ்ட்ராங்க்தலித்படுகொலைபா ரஞ்சித்
Advertisement
Next Article