’யுஐ’ (UI) -பட விமர்சனம்!!
யுனிவர்சல் இண்டலிஜன்ஸ் என்பதன் சுருக்கமான UI-மூலம் அரசியலை நையாண்டியாக மட்டும் இன்றி, ஃபேண்டஸியாகவும் பேசியிருக்கும் டைரக்டர் உபேந்திரா. அதிலும் நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கை ஸ்லைடுடன் நாட்டில் மதம் மற்றும் சாதியை வைத்து மக்களை பிரிவினை படுத்தும் சக்திகள் பற்றி அலசி இருக்கிறார். கூடவே இயற்கை வளங்களை சுரண்டுவதால் எதிர்காலத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதையும் தனது கற்பனை உலகத்தின் மூலம் அப்பட்டமாக படம் - அதுவும் ஸ்ட்ரைட்டாக ரசிகனின் பார்வைக்கு ஒரு கதை தெரியும். அதை கொஞ்ச்சம் உள்வாங்கி காணும் போது இன்னொரு கதை புரியும் வகையில் இரண்டு கோணங்களில் வழங்கி அசத்த முயன்றிருக்கிறார்.
அதாவது சினிமா டைரக்ரான உபேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை தியேட்டர்களில் பார்க்கும் சிலர் பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடுறார்கள். சிலர் இப்படம்தான் தங்களுக்கு வாழ்க்கையில் தெளிவான கோணம் கிடைத்து விட்டது எங்கிறார்கள். இப்படி, அந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறது. இச்சூழலில் நம் நாட்டிலேயே புகழ்பெற்ற ஒரு விமர்சகருக்கு இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் விமர்சனம் எழுதவே தோன்றவில்லை. எனவே டைரக்டர் உபேந்திராவைத் தேடி நேரே அவர் வீட்டுக்கு வரும் அவர், உபேந்திரா எழுதிய ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டை வாங்கி வாசிக்க… அவருக்கு புரியவரும் கதைதான் ’யுஐ’ படத்தின் கதை.
நாயகன் & டைரக்டர் சத்யா மற்றும் கல்கி பகவான் என டபுள் ரோலில் நடித்திருக்கும் உபேந்திரா, சத்யா கேரக்டரில் மென்மையாகவும், கல்கி வேஷத்தில் மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சியில் இரத்தம் தெறிக்க எண்ட்ரி கொடுப்பவர், எதிராளிகளை பந்தாடுவார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், அவர்களிடம் தன் உடம்பை பஞ்சராக்கிக் கொண்டு மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார். அதிலும் பார்ப்பவர்களுக்கு சூப்பர் ஸ்டார் உபேந்திராதான் திடீரென்று கல்கி அவதாரம் எடுத்து விட்டதாகத் தோன்றும். ஆனால் போகப் போகத்தான் புதிர் முடிச்சை அவிழ்த்து இவர் வேறு, அவர் வேறு என்பது தெரிவிக்கப்படும் பாணி சுவாரஸ்யம் . ஹீரோயினாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக படம் முழுவதும் ட்ராவல் செய்வதில் ஆடியன்ஸ் ஹேப்பி. திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
படத்தின் சப்ஜெக்ட்தான் வேற லெவல் என்பதெல்லாம் வெற்றுச் சொல்தான் நம்ம இசை அப்படி இல்லை என்று முடிவு செய்து மிரட்டலாக இசை அமைத்து கவர்திருக்கிறார் மியூசிக் டைரக்டர் பி.அஜனீஷ் லோக்நாத்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெகு மக்களுக்கானதாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபால், கணினி வரைகலையினர் மற்றும் கலை இயக்குநர் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் காட்சிகள் வேறுபட்டு இருக்கின்றன.
எழுதி இயக்கி நடித்திருக்கும் உபேந்திரா லோக்கல் பாலிடிக்ஸ் தொடங்கி வேர்ல்ட் பாலிட்டிக்ஸ் வரை பேசியிருந்தாலும், எதையும் நேரடியாக பேசாமல் குறியீடாக காட்டியிருகிறார்.அவரது இந்த முயற்சி புதியதாக இருந்தாலும் அதுவே விபரீதமாகவும் மாறி போயுள்ளது. ஒட்டு மொத்தமாக, படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்வையாளர்கள் புரியாமல் விழித்தப்படியே வெளியேறுகிறார்கள். நாம் நடமாடும் நாட்டில் உள்ள நகரங்களில் ஒழுங்கான சாலைகள் இல்லை, ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களுக்கு சரியான உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கி குவித்துக்கொள்வது, இயற்கை வளங்கள் பலரது சுயநலத்திற்காக சூரையாடப்படுவது ஆகியவற்றால் எதிர்காலத்தில் மக்களின் நிலை எப்படி இருக்கும்? என்ற தனது கற்பனைக்கு உயிர் கொடுத்தாலும், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உபேந்திரா & டீம் முழுமையாக தடுமாறி விட்டார்கள்.
மொத்ததில் இந்த UI படம் - டோண்ட் வேஸ்ட் யுவர் டயம்
மார்க் 2/5