தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

துணை முதல்வர் என்ற அடைமொழி மட்டும் பெறுகிறார் உதயநிதி!

07:21 AM Sep 29, 2024 IST | admin
Advertisement

மிழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி பதவியேற்கிறார்.

Advertisement

நம் நாட்டைப் பொறுத்தவரையில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகார் மாநிலத்தைச் சேந்த அனுராக் நாராயணன் சின்கா. அவர் 1937 முதல் 1939 வரையிலும், 1946 -1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆந்திரப் பிரதேசத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், சித்தராமையா, எடியூரப்பா, பிகாரின் சுஷீல் குமார் மோடி, குஜராத்தின் கேஷுபாய் பட்டேல் என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராகப் பதவி வகித்திருக்கின்றனர்.

தற்போது, ஆந்திரா தொடங்கி உத்தரப் பிரதேசம் வரையிலும் 14 மாநிலங்களில் 23 பேர் துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றனர். அதில், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இரண்டு பேர் துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றனர். ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில், ஐந்து பேர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நம் அண்டை மாநிலங்களான, கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், ஆந்திராவில் பவன் கல்யாண், தெலங்கானாவில் மல்லுபட்டி விக்ரமார்கா துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

Advertisement

துணை முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164வது பிரிவு ஆளுநரின் அதிகாரம் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட மாநில அமைச்சர்களை நியமிக்கும் செயல்முறையை விவரிக்கிறது. இதில் துணை முதல்வர் பொறுப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்தக் காரணத்துக்காக ஒருவருக்குத் துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டாலும் அந்தப் பதவிக்கென்று எந்தவொரு சிறப்பு அதிகாரமும் கிடையாது. இவ்வளவு ஏன், ஊதியத்தில்கூட எந்தவொரு சலுகையும் கிடையாது. அப்படித்தான் சட்டங்கள் சொல்கின்றன.

அமைச்சர் பதவிக்கு நிகரானது மட்டுமே : என்றாலும், அரசியல் வசதிக்காகவும் நிர்வாகக் குழப்பத்தைத் தவிர்க்கவும் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தவும் அவ்வப்போது துணை முதலமைச்சர் பதவிகள் தரப்படுவது வழக்கமாகிவிட்டது.

அதேவேளை, ``பல மாநிலங்களில் இரண்டு மூன்று கட்சிகள் சேர்ந்து கூட்டணி அரசு அமையும்போது, கூட்டணிக் கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஒருசில மாநிலங்களில் கௌரவப் பதவிக்காக அந்தப் பொறுப்பு வழங்கப்படும். மொத்ததில் துணை முதல்வர் பதவி என்பது வெறும் கவுர பதவி மட்டுமே. அது அதிகாரப்பூர்வமான அதிகார பதவி கிடையாது, அங்கீகாரமும் கிடையாது.இது மாநிலத் துணை முதலமைச்சர்களுக்கு மட்டுமானது அல்ல; இந்தியாவின் துணைப் பிரதமர்களுக்கும்கூடப் பொருந்தும். ஆம், இந்தியாவின் துணைப் பிரதமர்களாக சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜகஜீவன் ராம், ஒய்.பி.சவான், தேவிலால், எல்.கே.அத்வானி என்றுபலரும் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் அதிக உரிமையும் அதிகச் சலுகையும் தரப்பட்டதே தவிர, அதிக அதிகாரங்கள் தரப்படவில்லை. அப்படித் தரப்பட வேண்டும் என்று அரசமைப்பும் சொல்லவில்லை. இந்தியாவின் துணைப் பிரதமருக்கே இதுதான் நிலை என்றால், மாநிலத்தின் துணை முதலமைச்சரின் அதிகாரம் எந்த அளவுக்கானது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்.இங்ஙனம் துணை முதல்வர் பதவிக்கென்று அரசியலமைப்பில் தனித்த அதிகாரம் இல்லாவிட்டாலும், அந்தப் பதவியில் அமரும் நபரைப் பொறுத்து பொதுவெளியில் அதற்கான மதிப்பு கூடும்

எனி வே வாழ்த்துகள் உதயா

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Deputy Chief MinisterDeputy CMpowersudhayanidhi stalinஅதிகாரம்உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர்
Advertisement
Next Article