தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக ஆறுதல் சொல்லி, நிவாரணம் வழங்கும் டிடிவி தினகரன்!

09:27 AM Dec 24, 2023 IST | admin
Advertisement

மமுக தலைவர் தினகரன் போக்கைப் பார்த்து பல அரசியல் கட்சிகள் வாயை பிளக்கிறதாம்.. காரணம்.. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முதல் பணி என்பதால் சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திட்டமிட்டிருந்த எம்.ஜி.ஆர் நினைவு நாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்து விட்டு கடந்த மூன்று நாட்களாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மக்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லி நிவாரணம் வழங்கி வருவதுதான்.

Advertisement

இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நேரில் சென்றபோதுதான் நாம் எண்ணியதை விட பல மடங்கு பாதிப்பு கடுமையாக இருப்பதை அறிய முடிந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகரம், கிராமம் எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து பகுதிகளையும் உருக்குலையச் செய்திருக்கும் வெள்ள நீரில், சிறுகச் சிறுகச் சேமித்து கட்டப்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்படும் போது பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை அவர்களை நேரில் சந்திக்கும் போது தெரிய வந்தது. விளைநிலங்கள் மழைநீரிலும், விவசாயிகள் கண்ணீரிலும் மிதக்கும் சூழலை பார்க்கும் போது ஊருக்கே உணவளிக்கும் உழவனையும் விளைநிலங்களையும் பாதுகாக்க தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு பாதிக்கப்பட்ட மக்களை கோபமடையச் செய்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

Advertisement

அடிப்படை அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பால் மற்றும் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பொதுமக்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதே இத்தருணத்தில் முதன்மையான பணி. அந்த வகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை கழகத்தினருடன் சேர்ந்து மேலும் சில நாட்கள் தங்கியிருந்து வழங்குவதென திடமான முடிவை எடுத்திருக்கிறேன்.

இந்நிலையில், சென்னையில் நாம் திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் உட்பட நான் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மேலும் சில நாட்கள் கழகத்தினருடன் இங்கேயே தங்கியிருந்து இம்மக்களுக்கு துணையாய் இருப்பதே இந்நேரத்தில் அவசியம் என கருதுகிறேன். அதே நேரத்தில் நம் புரட்சித்தலைவர் 36ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருவுருவச்சிலைக்கு கேட்டுக்கொள்கிறேன்.அந்தந்தப் நினைவு பகுதிகளில் அஞ்சலி புரட்சித்தலைவரின் செலுத்திடுமாறு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்காக கழகம் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டிய தேவை அதிகரித்திருப்பதால் கழகத்தினர் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டு சொல்லி விட்டு இன்று தூத்துகுடியில் மக்களை சந்திக்கிறார்.

நேற்று மிகக் கோரமாக பாதிக்கப்பட்ட ஏரலுக்கு எந்த அமைச்சரும், அதிகாரியும் எட்டிக் கூட பார்க்காத நிலையில் இவரே பலரை நேரில் ஆறுதல் சொல்லி நிவாரணம் வழங்கினார்.. இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் ‘’சாரோட குணம் அம்மாக்கிட்டே இருந்து வந்ததுங்க.. சுனாமி தொடங்கி சில புயல் பாதித்த போது அம்மா சாரை அனுப்பி உதவச் சொன்னதைக் கேட்டு சம்பவ இடங்களுக்கு போனவர் நிலைமையைக் கண்டு அதிர்ந்து போய் விட்டார்.. ஏழை மக்களின் இழப்பும், வேதனையும் அவரை நிலை குலையை வைத்ததை இப்போதும் சொல்லி நெகிழ்வார்.. இப்படியான இயற்கை நேரிடர்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்ததால் இப்போது வந்து போன புயல் வரை எல்லா இக்கட்டிலும் நேரடியாக களம் இறங்கி உதவுவதைக் கடமையாகவேக் கொண்டிருக்கிறார். முடிஞ்சா அவர் இது போன்ற நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார், எப்படி ஃபீல் பண்ணுகிறார் என்பதை நேரில் பார்க்கும் போது எங்களுக்கும் ஒரு அதிர்வலை வந்து விடுகிறது.. நீங்களே சொல்லுங்களேன் -எந்த கட்சி ஆளுங்களாவது இப்படி தொடர்ந்து மூனு நாள் நிவாரணம் வழங்கி இருக்காங்களா? அதிகாரிங்களே போகாத ஏரியாக்குள்ளே போய் மக்களை சந்திக்கிறாருங்க” என்றார்கள்A

Tags :
ammkflood reliefMigjam storm victimsttv dinakaran
Advertisement
Next Article