For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சீனாவை ட்ரம்ப் எதிர்கொள்ளும் தொனி அட்டகாசம்!

12:48 PM Jan 28, 2025 IST | admin
சீனாவை ட்ரம்ப் எதிர்கொள்ளும் தொனி அட்டகாசம்
Advertisement

லிவான பொருட்களைக் கொண்டு சீனா சந்தையை நிறைக்கிறது என்பது காலம் காலமாக சீனா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதே போல சீனாவில் மலிவான தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் அதனால்தான் எல்லா நிறுவனங்களும் தங்களது சந்தையை அங்கு திருக்கிறார்கள் என்றும் ஒரு தியரி ரொம்ப நாட்களாக உலவுகிறது. ஆப்பிள் நிறுவனர் டிம், இவர்கள் எந்த காலத்து சீனாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அப்படியெல்லாம் சீனர்கள் ஒன்றும் மலிவு கிடையாது. அங்கு தரமான வல்லுநர்கள், டெக்னீஷியன்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் அதுதான் நாங்கள் அங்கு செல்வதற்குக் காரணம் என்று சொன்னார்.

Advertisement

இப்போது இந்த டீப் சீக் விஷயத்திலும் அதுதான். செயற்கை நுண்ணறிவில் அமெரிக்க நிறுவனங்கள் வேக வேகமாக களத்தில் குதித்தன. சந்தையை யார் கைப்பற்றுவது என்பதில் கடும் போட்டி. அது இப்போது வரை அமெரிக்க நிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் டீப் சீக்கின் வருகை மற்ற நிறுவனங்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. பங்குச் சந்தையில் அமெரிக்க மென் பொருள் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ந்திருக்கின்றன. அது அதீத அச்சத்தின் பொருட்டு கூட இருக்கலாம். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் ஏக போகத்தை சீனாவின் தொழில் நுட்பப் பாய்ச்சல் உடைக்கும் என்றே உலக அளவில் AI நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Advertisement

கொரோனாவை ஒட்டி நான் சீன வளர்ச்சியைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதினேன். அதில் ஒரு கட்டுரையில் யவனிகா ஸ்ரீராம், தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் விஞ்ஞானம் குறித்த மாயப் புனிதங்களை உடைத்ததே சீனாவின் சாதனை என்று பின்னூட்டமிட்டிருந்தார். அதுவொரு மார்க்சியப் பார்வை. எனக்கு அது மிகப்பெரிய திறப்பாக இருந்தது. ஆனால் அதுதான் உண்மை. சீனாவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சியில் எந்தவிதமான புனிதப் பார்வையும் கிடையாது.

ஆப்பிள் போன் ஒரு வகை மேட்டிமைத்தனமான புனிதம். அதைப் பாவிப்பவர்கள் பெரும்பான்மை அப்படித்தான் நினைக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் போனை பாவிப்பவர்களே மேட்டுக்குடியினர் தான் என்கிற பார்வை இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு இருந்தது. அதை உடைத்தது சீன அலைபேசிகள்தான். மலிவான கோடிக்கணக்கான அலைபேசிகளை சந்தையில் இறக்கி அந்தப் புனிதத்தை அது ஒன்றுமில்லாமல் ஆக்கியது.

மருத்துவப் பொருட்கள், கனரக எந்திரங்கள், ஆட்டோ மொபைல் போன்றவற்றிலும் சீனா இன்று நிகழ்த்தியிருப்பது பெரும் புரட்சி. அது சென்று கொண்டிருக்கும் வேகத்திற்கு இந்த AI தொழில்நுட்பம் ஒரு தடையாக அமைந்துவிடுமோ என்று சீனா அஞ்சியது. அதில் கவனம் செலுத்தி, அந்தத் தடையைக் கடந்துவிட வேண்டும் என்று நினைத்தது. இன்று டீப் சீக் அதை சாதித்திருக்கிறது.

இந்த விவகாரத்தை ட்ரம்ப் எதிர்கொள்ளும் தொனி அட்டகாசமாக இருக்கிறது. அவர்களை விட நாம் நிறைய விஞ்ஞானிகளை வைத்திருக்கிறோம். சீனா இந்த சந்தையை உடைத்து விலை குறைய வழி வகுத்தால் அது நமக்கும் நல்லதுதானே என்கிறார். இதையொட்டி நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

கார்ல் மாக்ஸ் கணபதி

Tags :
Advertisement