வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! - முழு விபரம்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்பும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் தன் நாட்டுக்காக செய்யும் அடுத்தடுத்த பல விஷயங்கள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில் அவரும் துணை அமெரிக்க ஜனாதிபதியுமான ஜேடி வேன்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்து கொண்டனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசார விவாதம்தான் தற்போது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பிய விஷயமாக மாறியிருக்கிறது.
அதாவது, ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் – உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், இது சமாதான ஒப்பந்தத்திற்கு முக்கியமானது என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இருப்பினும், ஜெலென்ஸ்கியின் தவறான நடத்தையை டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அவரது நடவடிக்கை மூன்றாம் உலகப் போருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது.ஜெலன்ஸ்கி, சில விஷயங்களை பேச முயல, அவரை குரலை உயர்த்தி அடக்கிய ட்ரம்ப், அமெரிக்கா ஆயுதம் கொடுத்தும், உக்ரைன் அதை உபயோகிக்காதது குறித்தும், அதற்கு அமெரிக்காவிற்கு அவர் நன்றி தெரிவிக்காதது குறித்தும் பேசினார். ஜெலன்ஸ்கி “என்னை கொஞ்சம் பேச விட்றீங்களா?” என கேட்க, அதற்கு ட்ரம்ப் “நீ இதுவரை பேசியதே போதும். அமைதியாக இரு” என்று தெரிவித்தார்.தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடனான விவாதத்தில் ஈடுபட்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி 3ஆம் உலகப்போருக்கு வழிவகுப்பதாகவும், இதுவரை அவர் செய்த செயல்பாடுகள் அப்படித்தான் இருப்பதாகவும் கூறினார். இந்த விவாதத்தில், பெரும் குரலாக இருந்த இன்னொருவர் ஜேடி வேன்ஸ். இவர், “நீங்கள் அமெரிக்காவிற்கு நன்றி உள்ளவராக இல்லை” என்று ஜெலன்ஸ்கி மீது குற்றம் சாட்டினார்.
மேலும் ட்ரம்ப் பேசியபோது, ''உக்ரைன் பெரிய சிக்கலில் உள்ளது, நீங்கள் அதை வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் எங்களுடன் இருந்தால், அதிலிருந்து வெளியேற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை என்று உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். போரில் நீங்கள் வெல்லவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது.உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும். நான் ரஷ்யா மற்றும் உக்ரைன் நடுவில் கொண்டு வரவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய மாட்டீர்கள்.நீங்கள் புதினை வெறுக்கிறீர்கள், நான் கடுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உலகில் உள்ள வேறு எவரையும் விட நான் கடுமையாக இருக்க முடியும். ஆனால் நீங்கள் அந்த வழியில் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முடியாது'' என்றார்
இறுதியில், நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
இது போன்ற சென்சிட்டிவான சந்திப்பு மீடியா முன்னிலையில் நடந்திருக்கிறது கூடாது. அதில் எங்களுக்கு பெரிய வருத்தம் தான் டிரம்ப் உடனான வார்த்தைப் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்திருக்கிறார்.மேலும் பாதுகாப்பு குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, “பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் போர் நிறுத்தம் பற்றியது என்றால், போர் நிறுத்தம் பற்றிப் பேசவே முடியாது. ஏனெனில் அது ஒருபோதும் பயனளிக்கவில்லை. புதின் 25 முறை போர் நிறுத்தத்தை மீறியுள்ளார். 2016 இல் (டிரம்ப்) அதிபராக இருந்தார், எனவே போர் நிறுத்தம் பற்றி இப்பொது பேச முடியாது. பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் அது எந்தப் பயனும் இல்லை” என்று அவர் கூறினார்.
இந்தநிலையில்தான் இவ்விவகாரம் உலக அளவில் அரசியல் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.