தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ட்ரம்ப் குற்றவாளி: அமெரிக்க அதிபர் ஆவதில் பின்னடைவு?!

07:09 PM May 31, 2024 IST | admin
Advertisement

லான பட நடிகையுடனான செக்ஸ் உறவு குறித்து வெளியில் பேசாமல் இருக்க அந்த ஆபாச அழகிக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இப்படி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், டிரம்ப் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீடிக்க முடியும். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. அதன்படி போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் அமெரிக்க குடிமகனாகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என்றாலும் அதிபராக வாய்ப்பு குறைவு என்பது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்தாண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக 2018ம் ஆண்டு ஆபாச படம் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவரிடனான திருமணம் தாண்டிய உறவை மறைப்பதற்காக 13 லட்சம் அமெரிக்க டாலர்களை, டிரம்ப் சார்பில் அவரது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. போலியான வணிக பரிவர்தனைகள் மூலமாக ட்ரம்ப் இந்த பணத்தை டேனியல்ஸுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

2016ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இந்த பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 34 மோசடி வழக்குகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டது. மேன்ஹேட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி மெர்க்கன் அறிவித்துள்ளார். வருகிற ஜூலை 11ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதிபராக பொறுப்பேற்க முடியுமா என்கிற கேள்வி எழுத்து உள்ளது. மேலும் தேர்தலில் இந்த விவகாரம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கிரிமினல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
becomingSetbackTrump guiltyUS president
Advertisement
Next Article