தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கள்ளக்குறிச்சி சம்பவத்தை திசை திருப்ப திமுக செய்யும் வித்தைகள்!

01:15 PM Jun 26, 2024 IST | admin
Advertisement

ள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விஷயத்தில் ஸ்டாலின் வெளிப்படையாக நேர்மையாக செயல்பட்டதால் நடந்தது என்ன தெரியுமா? முடிந்தால் தவிர்க்காமல் படியுங்கள்..!கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விஷயத்தில் நேரடியாக முதலமைச்சரை குறை சொல்லலாமா? இறந்தவர்களுக்கு அதிரடியாக அன்றே 10 லட்சம் ரூபாய் வழங்கினார்கள். சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உடனடியாக மருந்துகளை இறக்குமதி செய்து பலரை காப்பாற்றினார்கள். அடுத்த நாள் தமிழக முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 876 சாராய வியாபாரிகளை கைது செய்கிறார்கள்.3 நாட்களில் மட்டும் 4500 லிட்டர் கள்ளசாராயத்தை அழிக்கிறார்கள், 861 வழக்குகள் பதிவு செய்கிறார்கள். இதனையெல்லாம் சட்டமன்றத்தில் சொல்லி பெருமை கொள்கிறார். உடன்பிறப்புகள் 27 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த சோகத்தைக் கூட சாதனையாக அதிரடி நடவடிக்கையாக தான் பேசினார்கள். திமுக எம்எல்ஏக்கள் உத்தமபுத்திரர்கள் மாதிரியும், உண்மைகளை அப்பட்டமாக ஒளிவு மறைவில்லாமல் பாமக தலைவர் அன்புமணி அவர்கள் பேசிவிட, இல்லாத மானத்திற்கு அவர் மீது மானநஷ்ட வழக்கு வேற போடுவதாகவும் மிரட்டிப் பார்க்கிறார்கள்.

Advertisement

திமுக உடன்பிறப்புகள் எல்லோருமே உங்கள் மாவட்டத்தில் எல்லாம் சாராயம் காய்ச்சவில்லையா, விற்கவில்லையா என கேட்கிறார்கள். மறுபுறம் இந்த விஷயத்தில் பாஜக, அதிமுகவிற்கு தொடர்பு இருக்கிறது என மக்களை நம்பவைக்க திமுகவினர் பலத்த முயற்சி செய்து வருகின்றனர். மேற்கொண்டு உங்கள் மாவட்டத்தில் சாராயம் இல்லையா? என்ற கேள்வியிலே காவல்துறை அமைச்சர் ஸ்டாலினின் தோல்வியை ஒப்புக்கொண்டனர். பாஜக அதிமுகவிற்கு தொடர்பு இருக்கிறது, காய்ச்சியவர்கள், விற்பவர்கள் எதிர்க்கட்சியினர் தான் என குற்றச்சாட்டு வைக்கும் திமுகவினர், இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

Advertisement

அடுத்த நாள் ஸ்டாலினே எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஸ்டாலினுடைய காவல்துறை, முத்துசாமியின் மது விலக்கு துறை, கேகேஎஸ்எஸ் ஆர் ராமசந்திரன் வருவாய் துறை, மதிவேந்தன் வனத்துறை என அனைவரின் தோல்வியையும் காட்டிக்கொடுத்துவிட்டார்.மூன்று நாட்களில் 4 மாவட்டத்தில் மட்டும் 876 சாராய வியாபாரிகளை கைது செய்கிறார்கள் என்றால் அவர்கள் இவ்வளவு நாளாக விற்றுக் கொண்டுதானே இருக்கிறார்கள்? ஸ்டாலினின் காவல்துறை உறங்கியதா? இல்லை ஸ்டாலின் உறங்க வைத்தாரா? நான்கு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் திடீர் என வரவில்லை, அங்கே புழக்கத்தில் இருந்திருக்கிறது. சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்ட பல தகவல்களை மாதம் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் அறிக்கை கொடுத்தார்களா இல்லையா? அவர்கள் அறிக்கையை பெறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கை என்ன? மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை இடம்மாற்றி பாதுகாத்ததன் நோக்கம் என்ன? சட்ட விரோத கள்ளசாராய மது விற்பனையை தடுக்க தவறிய மதுவிலக்கு துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருடைய துறை அதிகாரிகளுக்கு சட்ட விரோத மது விற்பனை நடப்பது தெரியவில்லையா? மலைக்காடுகளில் காய்ச்சுகிறார்கள் என்றால் அங்கே மலைகிராமம் இருந்தால் அதற்கு வருவாய் துறை அதிகாரிகள், காவல்நிலையம் எல்லாம் இருக்கும் தானே! அவர்கள் என்ன செய்தார்கள்? ஒருவேளை வனதுறையால் பாதுகாக்கபட்ட பகுதி என்றால் அங்கே வனத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், பாதுகாவலர்கள் என இருப்பார்களே அவர்கள் என்ன செய்தார்கள்? வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இதையெல்லாம் கவனிக்கவில்லையா?

கடந்த ஆண்டே மரக்காணத்திலும் இடைக்கழிநாட்டிலும் கள்ளசாராயம் குடித்து இறந்தார்களே, மெத்தனால் முறைவு மருந்திணை கையிருப்பில் வைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி சொன்னாரே, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சு ஏன் பதில் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி மருந்து பெயரை மாற்றி சொன்னதை பேசுப்பொருளாக்கியவர், அன்புமணியின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே! தொடர்ந்து இப்பகுதியில் சாராயம் குடித்து இறக்கிறார்கள், இன்று மொத்தமாக இறந்ததால் வெளியே தெரிந்தவிட்டது என குற்றம் சாட்டுகிறார்களே, ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து ஒரே மாதிரியான இறப்புகள் வருகிறது என்றால் அது தொடர்பான அறிக்கையை தயாரித்து அப்பகுதியில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எவ வேலு தன்னுடைய மாவட்டத்தில் எல்லாத்துறையும் சரியாக இயங்குகிறதா என பார்ப்பதில் கோட்டைவிட்டாரா? தொகுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதை எம் எல் ஏ க்கள் ஏன் சரி செய்யவில்லை.. இத்தனை அமைச்சர்கள் துறைகள் செயல்படவில்லை என்பதை, ஸ்டாலினின் காவல்துறை இரண்டே நாளில் அம்பலபடுத்திவிட்டது. அதாவது அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் அவர்களை அவர்களே காட்டிக் கொடுத்துவிட்டனர்.

ஆக அனைத்து துறை அமைச்சர்களையும் கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்? அமைச்சர்கள் அவர் கட்டுப்பாட்டில் இல்லையா? இத்தனை துறை தோல்வியில் இருப்பது ஸ்டாலினுக்கு தெரியாதா? அவர் முதலமைச்சராக இருக்க தகுதியானவர் தானா? இப்போது சொல்லுங்கள் அனைத்திற்கும் ஸ்டாலின் தானே காரணம்! அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? அரசு அதிகாரிகளை இங்கே பலிகடாக்க முடியாது. சிலர் இயல்பிலே தவறானவர்களாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் விரும்பி உடந்தையாக இருப்பதில்லை, அரசியல்வாதிகளின் அழுத்தத்தினால் தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இவ்விவகாரத்தில் மக்களின் குரலாக நின்று அனைத்தையும் உடைத்து வெளிப்படையாக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யாவும், தலைவர் அன்புமணி அவர்களும் வெளிப்படையாக பேசிவிட்டனர். இதனை பொறுக்க முடியாமல் இல்லாத மானத்திற்கு மான நஷ்ட வழக்கு போடுவோம் என பூச்சாண்டி காட்டினார்கள்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள். பாமகவினர் பின்வாங்குவார்கள் எனப்பார்த்தால் எல்லாவற்றையும் நான் எதிர்கொள்ளத் தயார் என அன்புமணி சொல்லிவிட்டார். பாமகவை திசை திருப்ப திமுக என்ன என்னவோ செய்தாலும், பாமக விடாமல் இறங்கி அடிக்கிறது.


இறுதி ஆயுதமாக சாராயம் விற்றவர்கள், காய்ச்சியவர்கள் பாமகவினர் என திசை திருப்பப் பார்த்தனர். நல்ல வேளையாக பாதிக்கபட்ட இடத்தில் பாமக கிளையே இல்லை. முழுவதும் பட்டியலின மக்கள், இல்லை என்றால் இந்நேரம் திமுக சரியான தில்லாலங்கடி வேலைகளை காட்டியிருக்கும்..

40 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி மதுவிலக்கு போராடி வருகிறது என்பது பாதிக்கபட்ட பட்டியலின மக்களே சொல்லும் அளவுக்கு பாமக மது எதிர்ப்பை தீவிரமாக பேசிவருகிறது. அதற்காக பாமகவினர் குடிக்கலையா என சில அறிவாளிகள் கேட்பார்கள், அனைவரையும் காப்பாற்ற தான் பாமக பேசுகிறது என்பதை அந்த அறிவாளி ஏற்றுக்கொள்ளமாட்டார்.. சாராயம் விவகாரத்தால் விக்கிரவாண்டி தேர்தலில் பணம் கொடுத்தலும் எடுபடாது என்பதை உணர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்தை திசை திருப்ப திமுக என்ன என்னவோ வித்தைகளை செய்து பார்க்கிறது., ஆனால் பருப்பு தான் வேகவே மாட்டேங்குது.

ராஜேஷ்

Tags :
ஆளும் அரசுகள்ளக் குறிச்சிகள்ளச்சாராய சாவுகள்திமுகபாமக
Advertisement
Next Article