தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சார்பில் முப்பெரும் விழா!

01:42 PM Dec 24, 2023 IST | admin
Advertisement

சென்னை புழலில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரிலால் பரிஹர்சைன் பவன் அரங்கில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு வருகை தந்தவர்களை ஆந்திர மாநில, மாவட்ட மாஜிஸ்திரேட்டும், நவசமாஜ் அமைப்பின் பொதுச் செயலாளருமான திரு.சூரியா நாராயணா வரேவற்றார். கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர், முனைவர் டாக்டர் எம்.அன்பானந்தம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பிசி பன்வார், மாநில பொருளாளர் டாக்டர் சேகர் பாபு, மாநில அமைப்புச் செயலாளர் பாலசந்தர், மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, மாநில இணைச் செயலாளர் லயன்.மதிவாணன், தாளார்கள் டாக்டர் இராமலிங்கம் மற்றும் ராதேஷியாம், திரு முருகன், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

சிறப்பு அழைப்பாளராக, நவசமாஜ் தேசிய தலைவர் பொறியாளர் சுகர் சிங், மகாராஷ்டிரா, சமாஜ்மண்டல்தலைவர் ஷ்யாம்ஜி சுனிர்வால், நவசமாஜ் துணை தலைவரும், லோக் தந்திரிக் சமாஜ்வாடி பார்டியின் அகில இந்திய துணைத் தலைவருமான பொறியாளர் முகேஷ் சந்திரா, தலைவர் சுகர் சிங், லோக் தந்திரிக் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஸ்ரீரகு தாகூர், தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு காலதாமதம் செய்வதால் மருத்துவர் இன மக்களின் சமூக பொருளாதார கல்வி முன்னேற்றம் மிகக் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆண்டாண்டு காலமாக தீண்டாமைக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த மருத்துவர் போன்ற சேவை இனங்களை தொகுத்து அவர்களின் கல்வி வேலைவாய்ப்புகளில் பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை கூடுதலாக பெற அரசு வழி வகை காண வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement

ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு, கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றில் இட ஒதுக்கீடு மிகவும் அவசியம். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே நலிந்தவர்களும் பெண்களும் சமூக பொருளாதார கல்வி போன்றவற்றில் முன்னேற தகுந்த இட ஒதுக்கீடு கொள்கைகளை வகுத்த பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கற்பூரி தாகூர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இட ஒதுக்கீடும், இன உயர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Navasamaj Charitable Societyracial upliftmentreservation
Advertisement
Next Article