தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் பயண முன்பதிவு தொடங்கியது!

07:30 AM Sep 12, 2024 IST | admin
Advertisement

ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதில், பெரும்பாலானவர்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. எனவே, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள்.

Advertisement

இந்நிலையில் போகிப் பண்டிகை ஜன. 13ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், ஜன. 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதலே சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

முன்பதிவு தினங்கள்.

Advertisement

போகிப் பண்டிகை ஜன.13 (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடா்ந்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வியாழக்கிழமை வரை 4 நாள்களுக்கு அரசு விடுமுறை. இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் ஜன.10 (வெள்ளிக்கிழமை) முதல் பயணம் செய்வா்.

அந்த வகையில், ஜன.10-ஆம் தேதி பயணம் செய்வோா் (வியாழக்கிழமை) செப்.12-ஆம் தேதியும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் (வெள்ளிக்கிழமை) செப்.13-ஆம் தேதியும், ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் (சனிக்கிழமை) செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
advance bookingpongalrailபொங்கல்முன்பதிவுரயில்
Advertisement
Next Article