ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயருதுங்கோ!
தமிழ்நாட்டிலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டை விட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு விட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருவது சரியல்ல பலரும் கடும் கண்டம் தெரிவித்து வந்தாலும் நாட்டிலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஆண்டுக்கு இருமுறை சுங்கக்கட்டண உயர்வு நடைமுறையில் உள்ளது.
இத்தனைக்கும் பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,‘‘நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.
இச்சூழலில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.இதனையடுத்து மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும்.
📍 உயர்வு உடனடியாக ஏற்படும் முக்கிய சுங்கச்சாவடிகள்:
✅ வானகரம்
✅ செங்கல்பட்டு (பரனூர்)
✅ திண்டிவனம், ஆத்தூர்
✅ சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர்
... மற்றும் பல முக்கிய நெடுஞ்சாலை போக்குவரத்து வழிகள்!
💰 எத்தனை உயர்வு?
✔️ குறைந்தபட்சம் ₹5 முதல் ₹75 வரை கட்டணம் உயரலாம்.
✔️ மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்.
🚗 இனிமேல் ரோடு டிரிப் செல்லும் முன் கட்டண மாற்றத்தைக் கணக்கில் கொள்வது அவசியம்!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்