For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இன்றையத் துயரம்: அச்சிதழ்களுக்கு அஞ்சலி செலுத்திய "Reader's Digest

06:20 PM May 18, 2024 IST | admin
இன்றையத் துயரம்  அச்சிதழ்களுக்கு அஞ்சலி செலுத்திய  reader s digest
Advertisement

கப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளம் கவர் ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்த மே இதழ்தான் கடைசி என்று வந்துள்ள சேதி கனமான கவலையை ஏற்படுத்தி விட்டது. !. சர்வதேச வாசகர்களின் கர்வமிகு அடையாளம். வழுவழு தாளில் வசீகரிக்கும் கையடக்கக் கச்சித இதழ். வாசகர் உலகை - உலக வாசகர்களை வாரி விழுங்கிய "அச்சு வெள்ளம்".

Advertisement

ரீடர்ஸ் டைஜெஸ்ட் (Readers Digest) 1922 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே பல நாடுகளில் புகழ் பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1929 ஆம் ஆண்டுகளில், இது கணிசமான வாசகர்களையும் கணிசமான வருவாயையும் பெற்றிருந்தது.

1929 இல் 2 இலட்சத்து 90 ஆயிரம் வாசகர்களைப் பெற்ற readers digest இதழ் அந்த ஆண்டில், 9 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானத்தையும் ஈட்டியது. அதில், சுகாதார ஆலோசனைகள், நிதி ஆலோசனைகள் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.  அந்த இதழைத் துவங்கிய, 35 ஆண்டுகள் வரைக்கும், விலையில் எவ்வித மாறுதலும் செய்யவில்லை. இதனால், வாசகர்களிடம் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெறமுடிந்தது. அவரவர்க்கு விருப்பமான பகுதி, இன்ன இன்ன பக்கங்களில் இருக்கும் என்ற நிச்சயமும், வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது, அதன் வாசகர்களிடம் அந்தப் பழக்கம், வெகுகாலம் மாறவில்லை என்பதே இதன் வெற்றிக்கு வித்து..!

Advertisement

இப்போது நவீனமயமாகி விட்ட அவசர உலகில், எதையும் பொறுமையாக, விரிவாகப் படித்துக் கொண்டிருக்க, பெரும்பாலான வாசகர்களுக்கு, நேரம் கிடைக்காது என்பதை அப்போதே உணர்ந்த டேவிட் வேலஸ், எவ்வளவு விரிவான கட்டுரையையும், சுருக்கி, சுவை குன்றாது கொடுக்கத் தூண்டினார். அந்தத் திறன்தான் ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70க்கும் அதிகமான 21 மொழிகளில் 49 பதிப்புகளோடு, கூடுதலாக 40 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது.

ஒரு காலகட்டத்தில் இவ்விதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும் இதழாக இருந்தது. அத்துடன் readers digest சஞ்சிகை சீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பெரு போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி கொண்டிருந்த இதழாகவும் விளங்கியது.

அப்படியாக மொத்தம் 23 மில்லியன் பதிப்புகளுடன் சர்வதேச அளவிலான விற்பனையை கொண்டிருந்த readers digest சஞ்சிகை, பிரித்தானியாவில்தான் தனது முதல் வெளியீட்டை 1938 இல் ஆரம்பித்திருந்தது. அதே சமயம் 2000 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டதென்றும், அதன்பின்னர் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனக்கு பள்ளி வயதிலிருந்தே "ரீடர்ஸ் டைஜஸ்ட்" படிக்கப் பிடிக்கும். அப்பாவின் ஆர்வம். அடிக்கடி பழையது, அப்பப்போ புதுசு. அப்புறம் ஒரு கட்டத்தில் பந்தாவாக சந்தா கட்டுவோம். சொன்ன தேதியில் மின்னலென வந்துவிடும் இதழ். என்போன்ற சுமார் இங்கிலீஷ் குமார்களுக்கு அவ்வளவு ஃப்ரெண்ட்லியாக இருந்தது அதன் மொழி நடை. அதுவும் அந்த டிட் -பிட்ஸ். ஆக்ஹா! அத்தனை வெரைட்டி அவ்வளவு டேஸ்ட். எடுத்தவுடன் துணுக்குகளைப் பாய்ந்து மேய்ந்து விட்டுத்தான் பெரிய கட்டுரைகளில் கண் பதிப்போம்.

பாட்டன் காலத்துப் பொக்கிஷம். அப்பா காலத்து ஆனந்தம். நம் காலத்துக் கம்பீரம். 86 ஆண்டு கால மாபெரும் வரலாறு கொண்டது முன்னரே சொன்னது போல் "ரீடர்ஸ் டைஜஸ்ட்". 21 மொழிகளில் வெளியாகி, உலகில் அதிகம் விற்பனையாகும் இதழ் என்ற உச்சகட்டப் பெருமை பெற்றது. ஆனாலும் இதழை நிறுத்துவதற்குக், காரணம் - கடும் நிதி நெருக்கடியாம்!

இதையே சொல்லி பல தமிழ்ப் பத்திரிகைகளின் கதையை முடித்தார்கள். You too RD? ஒரு ரீடராக டைஜஸ்ட் செய்ய முடியவில்லை 😔

எம்.பி. உதயசூரியன்

Tags :
Advertisement