For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள, சிறப்பு ஆணையம் - உலக சுகாதார நிறுவனம் முடிவு

07:15 PM Nov 16, 2023 IST | admin
தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள  சிறப்பு ஆணையம்   உலக சுகாதார நிறுவனம் முடிவு
Advertisement

னிமை..!

Advertisement

இவனைப் போல் கொடூரமான அரக்கனும் இல்லை.." இவனைப் போல் உதவிகரமான நண்பனும் இல்லை.."

# சரியான ஒன்றை சரியாக பயன்படுத்தினால் சரியான இலக்கை சரியான நேரத்தில் அடையலாம் என்பது சரியான மனிதர்களின் சரியான பதிலாக உள்ளது..!

Advertisement

# நம்மிடம் இல்லை என்ற ஒன்று எதுவும் இல்லை நம்மிடம் இருக்கும் ஒன்றை சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதை நிச்சயமான உண்மை..

# தனிமையில் இருக்கும்போது நீ என்ன சிந்திக்கிறாயோ அதுவே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கிறார் விவேகானந்தர்..!

இந்த பரபரப்பான நகர வாழ்க்கையில் யாரும் பெரும்பாலும் தனிமையில் இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் பெரும்பான்மையான நேரங்களை உறக்கத்திலும் கேளிக்கைகளிலும் கழிக்கின்றனர்..

இந்தத் தனிமையில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வது. இதை Loneliness என்று கூறுகிறார்கள். வேறு சிலர் தாமாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்பும்போது அவர்கள் எல்லோருடனும் சஜகமாகப் பழகத் தொடங்கிவிடுவார்கள். இதைத்தான் தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே அதை எடுத்துக்கொண்டால் அது இனிக்கும்; மற்றவர்கள் நமக்குக் கொடுத்தால் அது கசக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. சில நேரங்களில் யாரும் நமக்கு அருகில் இல்லை என்றாலும்கூட மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க மொபைலில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று பல வழிகள் இருக்கும்போது நாமே வலிந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது நாம் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்பதையே குறிக்கிறது.

முதுமை, மனஅழுத்தம், நெருக்கமானவர்களின் பிரிவு என்று தனிமைக்கான காரணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது என்று மருத்துவரகள் எச்சரிருந்திருந்த நிலையில் தனிமையில் இருப்பது உடல் மற்றும் மன நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹைடெக்காகி வரும் தனிமையில் இருப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறி வருகிறது. மன நலன் மற்றும் உடல் நலன் ஆகிய இரண்டிற்கும் நீண்டகால விளைவுகளை தனிமை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை போன்ற மனநலப் பிரச்சனைகள் தனிமையால் விளைகின்றன. உடல் நலம் சார்ந்தவற்றில் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகள் காத்திருக்கின்றன.உடல் மற்றும் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பால், தனிமையில் இருப்பது சமூகத்திலிருந்து துண்டித்துக்கொள்ளவும், உறவுகளிடமிருந்து விலகுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் காரணமாக ​​உலக சுகாதார நிறுவனம், தனிமையை ஒரு தீவிர உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக அங்கீகரித்துள்ளது. தனிமை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, தேசம் தழுவிய உத்திகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் தனது உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தனிமையினால் தலைவலி, டென்ஷன், வெறுப்பு மற்றும் மனஅழுத்தம் போன்றவையும் ஏற்படும். மேலும் எதையாவது பற்றி தேவையில்லாமல் தீவிரமாக யோசிக்கத் தோன்றும். ஒருவர் வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலோ யாருடனும் பழகாமல் தனிமையிலேயே அதிக நேரம் இருந்தால் அது அவரை பற்றிய ஒரு தவறான புரிந்துணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும். இதை எல்லாம் தாண்டி தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பை, ஒரு நாளில் 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புடன் உலக சுகாதார நிறுவனம் ஒப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடல் உழைப்பின்மை, மிகை பருமன் ஆகியவை இந்த தனிமையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பாக விளைகின்றன. இவற்றுக்கு அப்பால் சமூக தொடர்பு இல்லாததால் தனியான பாதிப்புகளுக்கும் இவர்கள் ஆளாகிறார்கள்.

தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள, சிறப்பு ஆணையம் ஒன்றினை தொடங்கவும் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ’தனிமையின் தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான முதல் உலகளாவிய முயற்சி’ என்று உலக சுகாதார நிறுவனம் இதனை வர்ணிக்கிறது. மேலும், தனிமையில் இருக்கும் சக மனிதர்களை மீட்க உதவுமாறு, உலக மக்கள் அனைவருக்கும் அறைகூவல் ஒன்றையும் விடுத்துள்ளது. மேலும் ஆக, 'தனிமை' என்பது பல நேரங்களில் காயங்களாகவும் சில நேரங்களில் மட்டுமே அந்தக் காயங்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. சில பிரச்னைகளுக்குத் தனிமையில் யோசிக்கும்போது தீர்வு கிடைக்கலாம். ஆனால், ஒருபோதும் பிரச்னைகளுக்குத் தனிமை ஒரு தீர்வாகாது என்பதை மனதில் கொண்டு எப்போதும் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் இணைந்திருக்க முயல்வோம் என்று சொல்லி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement