தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

06:38 PM Aug 30, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) 105 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2 தாள்கள் கொண்ட தேர்வாக நடைபெறும் இத்தேர்வில் தாள் ஒன்றில், தமிழ் தகுதி தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு வரும் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும்.

இதற்கான பொது அறிவு தாள் தேர்வு கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வு இரண்டும் பொதுவாக ஒரு நாளிலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடங்களுக்கான தேர்வு தனித்தனியாகவும் நடத்தப்படும்.

இதனிடையே ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு) அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்த 12,19, 20, 21-ம் தேதிகளில் கணினி வழித் தேர்வாக தேர்வாக டிஎன்பிஎஸ்சி நடத்தியது.

இதில் கடந்த 12-ம் தேதி நடந்த தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பம் தொடர்பான விவரங்களை  டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.inwww.tnpscexams.in ) தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Exam DatenotificationTechnical Jobstnpscஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைடி.என்.பி.எச்.சி
Advertisement
Next Article