இன்ஜினியரிங் ரேண்டம் எண் வெளியீடு: கவுன்சிலிங் எப்போது?
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்விஆண்டில் (2024-25) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்திருந்த போதிலும், அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.அந்த வகையில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு முடிந்து சமவாய்ப்பு (ரேண்டம்) எண் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை கவுன்சலிங் தேதி
இந்நிலையில் சுமார் 2 லட்சம் பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ‘கட் ஆப்’ நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தரவரிசை பட்டியல், நாளை (ஜூலை 10) தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலின், tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அதே போல் நாளைய தினம் கவுன்சிலிங் தேதி உள்பட மற்ற விவரங்களும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இணையதளத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில்.. தரவரிசைப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து, விருப்பமானகல்லூரி மற்றும் பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு நடத்தப்படும்