டைட்டானிக்... அதே பிரம்மாண்டம்.. அதே ஹைடெக் வசதிகளுடன் உருவாக்கும் ஆஸி. கோடீஸ்வரர்!
சர்வதேச அளவில் அளவில் இன்றுவரை மிகப் பிரபலமானதாகக் கருதப்படுவது டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டில், அட்லான்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சோக சம்பவத்தில் சுமார் 1,500 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து 111 ஆண்டுகள் ஆன பின்பும், டைட்டானிக் கப்பல் குறித்த ஆராய்ச்சிகளும், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் செல்வதும் இன்றளவும் தொடர்ந்து நடந்துவருகின்றன.
அதாவது உலகில் எத்தனையோ கப்பல்கள் விபத்தில் சிக்கியிருந்தாலும் பெரும்பாலானோருக்கு நினைவில் வருவது டைட்டானிக் கப்பல் விபத்து தான். மனித வரலாற்றில் மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.ஆனால் இப்போதுக் கூட அந்த டைட்டானிக் கப்பலை நவீன வசதிகளுடன் மீண்டும் கட்டமைக்க, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தயாராகி வருகிறார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, அப்போதே 1.5 மில்லியன் பவுண்ட் மதிப்பில் உருவாக்கப்பட்ட கப்பல் தான் டைட்டானிக் கப்பல்.. இது தனது முதல் பயணத்திலேயே கடந்த 1912 ஏப்ரல் 15ஆம் தேதி பனிப்பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. இது வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கப்பலில் சுமார் 2200 பேர் இருந்த நிலையில், அவர்களில் சுமார் 1500 பயணிகள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.டைட்டானிக் கப்பலை அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக்(1997) திரைப்படம், அந்த கப்பல் குறித்தான பிரமிப்புகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
அந்த உணர்வோடு டைட்டானிக் மூழ்கி 124 ஆண்டுகள் கடந்த பின்னரும், அதன் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் குறையவில்லை. ஆம்.. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்கத்தொழில் கோடீஸ்வரரான கிளைவ் பால்மர் என்பவரும் இதில் அடங்குவார். வரலாற்றில் மிகவும் பிரபலமான டைட்டானிக் பயணக் கப்பலின் பிரதியை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த 2012-ம் ஆண்டு முதல் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதாவது டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவை உலகம் அனுசரித்தபோது, 2012-ல் இன்னொரு டைட்டானிக்கை உருவாக்கும் திட்டத்தை பால்மர் பகிரங்கமாக அறிவித்தார். அதற்கான அவரது முயற்சிகள் அதன் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து கைகூடி வந்தன. ஆனால் அதன் பிறகான கொரோனா காலத்தின் கட்டுப்பாடுகளால், பால்மரின் டைட்டானிக் கனவு பரணுக்குப் போனது. ஒருவழியாக கொரோனா பரவல் சந்தடிகள் குறைந்ததில், விட்ட இடத்தில் ஆரம்பித்து டைட்டானிக் கப்பலுக்கான பிரதியை உருவாக்கும் முயற்சிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.இதன்படி அடுத்தாண்டு தொடங்கும் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 2027-ல் கடலில் மிதக்க டைட்டானிக்-2 காத்திருக்கிறது. புதிய கப்பலின் கன்னிப் பயணம், 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கிய டைட்டானிக்கின் அசல் வழியைக் கண்டறியும் என்றும் பால்மர் சுவாரசியம் தெரிவித்திருக்கிறார். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களுடன் 2,345 பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் புதிய கப்பல் கட்டமைக்கப்படுகிறது. இவற்றில் ஏறக்குறைய பாதி அறைகள் முதல் வகுப்பு பயணிகளுக்காக ஒதுக்கப்படும் என்றும் பால்மர் தெரிவித்துள்ளார்.