தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘டைட்டானிக்’ மெனு கார்டு ஏலத்துக்கு வருகிறது!

05:50 PM Nov 09, 2023 IST | admin
Advertisement

லக மக்களின் மனங்களில்- நினைவுகளில் இன்றும் நீங்காமல் மிதந்து கொண்டே இருப்பது டைட்டானிக் கப்பல் . அது விபத்துக்கு ஆளாகி 111 ஆண்டுகள் ஆன பிறகும், அது தொடர்பான நினைவுகள் மக்கள் மனங்களில் இருந்து நீங்கியபாடில்லை.இன்றுவரை சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்களையும், கப்பல் ஆய்வாளர்களையும் டைட்டானிக் தன்மீதான பார்வையை அகற்ற அனுமதிக்கவே இல்லை. டைட்டானிக் கப்பலின் பிரம்மாண்டத்தை போல அது குறித்த ஏராளமான புத்தகங்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.கடந்த 2000ம் ஆண்டு கப்பல் மூலம் 28 நீர் மூழ்கி வீரர்களுடன் சென்று 800 வகையான டைட்டானிக்கின் எஞ்சிய பொருட்களை மீட்டனர். அதில் வைரபிரேஸ்லெட், பாக்கெட் கடிகாரம், கப்பலின் வரைபடம், உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இப்பொருட்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏலம் விடப்பட்டது. இதில் வைபிரேஸ்லெட் ரூ.146 கோடிக்கும் , வயலின் ரூ.130 கோடிக்கும், கோர்ட் ரூ. 1.50 கோடிக்கும் பாக்கெட் கடிகாரம் ரூ. 91 லட்சத்திற்கும் கப்பல் வரை படம் ரூ.2.15 கோடிக்கும் ஏலம் போனது. அதேபோல் 2017ல் ஹாஸ்கர் ஹால்வர்சன் என்ற முதல் வகுப்பு பயணி எழுதிய கடிதம் மீட்கப்பட்டு ரூ.120லட்சத்திற்கும் ஏலம் போன நிலையில் அப்போதைய சேகரிப்புகளில் ஒன்றாக, அதன் முதல் வகுப்பு உணவகத்தின் மெனு தற்போது ஏலத்துக்கு வருகிறது.

Advertisement

1912, ஏப்ரல் 11 அன்று டைட்டானிக் கப்பல் விபத்துக்கு ஆளானது. அதன் பிரம்மாண்ட கட்டுமானம் மற்றும் அதிலுள்ள வசதிகள் மட்டுமன்றி, அது கடலில் மூழ்கி விபதுக்குள்ளானதும், வரலாற்றில் சுவடுகளின் டைட்டானிக் நீடித்திருக்க காரணமானது. இன்றைக்கும் டைட்டானிக் சிதிலத்தை பார்வையிட, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நீர்மூழ்கியில் ஆழ்கடலுக்கு பயணம் செல்வோர் உள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது, இன்னொரு பிரம்மாண்டமாக திரைப்பட வடிவிலும் மக்களின் நினைவுகளில் பிற்பாடு தங்கிப்போனது.

Advertisement

தற்போது விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் எச்சங்களில் ஒன்றாக, அதன் முதல் வகுப்பு உணவகம் ஒன்றின் மெனு கார்ட் கிடைத்துள்ளத்து. , டைட்டானிக் கப்பலில் பயணித்த கனடாவின் நோவா ஸ்கோடியாவைச் சேர்ந்த லென் ஸ்டீபன்சன் (Len Stephenson) என்பவர், 2017-ல் இறந்தார். அவரது உடைமைகள் சோதிக்கப்பட்டபோது, அதில் டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பு பயணிகளின் இரவு உணவு மெனு கிடைத்திருக்கிறது.

அந்த மெனுவில் அப்போதைய கோடீஸ்வரர்களான ஜே.ஜே.ஆஸ்டர், பெஞ்சமின் குகன்ஹெய்ம், சர் காஸ்மோ டஃப்-கார்டன், மோலி பிரௌன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஆடம்பரமான உணவுகளான சிப்பிகள் (Oysters), ஸ்குவாப் எ லா கோடார்ட் (Squab a la Godard), ஸ்பிரிங் லாம்ப் (Spring Lamb), டூர்னெடோ ஆஃப் பீஃப் எ லா விக்டோரியா (Tournedo of Beef a la Victoria), மல்லார்டு டக் (Mallard Duck), ஆப்ரிகாட்ஸ் போர்டலூ (Apricots Bourdaloue) உள்ளிட்ட உணவுகள் குறிப்பிடப்பட்டிருந்திருக்கின்றன. இந்த இரவு உணவு மெனுவை `ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் & சன் லிமிடெட்' ஏல நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. , இந்த மெனு கார்டு தற்போது ஏலத்துக்கு வருகிறது. பிரிட்டன் பவுண்டு மதிப்பில் 60 ஆயிரத்துக்கு இதன் விலையை நிர்ணயித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ61 லட்சமாகும்.

Tags :
auctionMenucardTitanicTitanic ship
Advertisement
Next Article