தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

திருப்பதி:பாதயாத்திரை வரும் பக்தர்களின் கவனத்திற்கு..!

06:26 PM Oct 26, 2024 IST | admin
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். சாலை மார்க்கமாக வந்து செல்லும் பக்தர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி மலைபாதைகள் வழியாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை தேவஸ்தானம் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு;

Advertisement

* 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா,வலிப்பு, மூட்டுவலி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம்.

Advertisement

* உடல்பருமன், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலை ஏறுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

* திருப்பதி தேவஸ்தானம் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதய நோய், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம்.

* நீண்டநாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், பயணத்தின் போது தேவையான மருந்துகளை கைவசம் எடுத்துச் செல்வது நலம்.

* ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சை வேண்டுவோர், கோயில் செல்லும் மலைப்பாதையில் 1500வது படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுக்களை அணுகலாம்.

* திருமலையில் உள்ள மருத்துவமனையில் 24 மணிநேரமும் உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

* நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், கிட்னி தொடர்பான தொந்தரவுகளுக்கு சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :
attention of devoteespadayatra..!Pedestrian PathTirumalatirupati
Advertisement
Next Article