'நான் மோடி குடும்பம்..'என்று சொல்வதை நிறுத்துங்கள்!
'நான் மோடி குடும்பம்..' என்று சோசியல் மீடியாவில் போட்டுக் கொள்வது, இன்னபிற அரசியல் அபிமான அதீதங்களை நிறுத்துங்கள் என்று மோடியே சொல்லி விட்டார்..! அவர் அப்படி சொன்னதற்கு காரணம் உண்டு பிஜேபி நண்பர்களே..! அதை உணருங்கள்..! பிஜேபி தேர்தலில் வாங்கிய அடிக்கு, சோசியல் மீடியாவில் பிஜேபி பக்தாஸ் வெளிப்படுத்திய கட்சி வெறி, மத வெறி, அதீத மோடி துதியும் ஒரு காரணம்..! மோடி துதியில், சோசியல் மீடியாவில் பிஜேபி பக்தாஸ் மூர்க்க நிலைக்குச் சென்றனர். அதைப் பார்த்து மக்கள் பலர் "அய்யய்யே..! இதென்ன.. அரசியல் அபிமானம் இந்த அளவு வெறித்தனமாகப் போகலாமா..? இவர்கள் நார்மல் மனிதர்களுக்குண்டான நிதானத்தை இழந்து விட்டார்களா..? இது நாட்டுக்கு நல்லதுதானா..?" என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்கள்..!
'தம் கருத்துக்கு மாற்று கருத்து சொல்பவர்கள் எல்லோரையும் துவேஷித்து ஒதுக்கி, தமக்குள்ளேயே ஒரு காம்ப்ளெக்ஸ் உருவாக்கிக் கொண்டு,, மனநிலை பிறழ்வு ஸ்டேஜிக்கு போய் விட்ட இவர்களிடம் எதை நாம் பேசி விவாதிக்க முடியும்..? நாம சைலண்டா இருந்துட வேண்டியதுதான்.. இல்லையென்றால் இவர்கள் தங்கள் மூர்க்கத்தால் நட்புகளிடேயே, உறவினர்களிடேயே, ஏன் தன் குடும்பத்திலேயே கூட துவேஷ வினைகள் செய்து விடுவார்களோ..?' என்ற பயம் உருவாகும்படியான உக்கிர நிலையை எட்டினார்கள் பக்தாஸ் சிலர்..!
நண்பர் ஒருவர் தன் ஒரு பதிவில் எழுதி இருந்தார்: "எவ்வளவு நட்பாக மரியாதையாக பழகி இருந்தாலும், அரசியல் கண்ணோட்ட வேறுபாடு கொண்டு விட்டால், நம் வயதையும் பாராமல் 'அவன் இவன் போடா..' என்றெல்லாமும் இன்னும் அநாகரீக வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி நம்மை ஏசுகிறார்கள் என்றால் அவர்கள் சங்கிகளாகத்தான் இருப்பார்கள்' என்று..! உண்மை..! அரசியல் மாற்றுக் கருத்து எழுதினால், அதற்கு எதிர்க் கருத்து எழுதாமல், எழுதியவரை ஜன்ம எதிரியாகப் பார்த்து அடிப்படை நாகரிகத்தை மறந்து நடந்தனர் சில ரைட் விங் நண்பர்கள். அவர்களைத்தான் நான் 'பக்தாஸ்' என்று குறிப்பிடுகிறேன்.
தவறை மோடி புரிந்து கொண்டு விட்டார். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் பிஜேபி ஆதரவு நண்பர்களே..! உங்களுக்குப் பிடித்த கட்சியை, தலைவரை ஆதரியுங்கள். எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு..! ஆனால் அதற்காக எந்த வகையிலும் நிதானம் இழக்காதீர்கள்..! அடிப்படை டீசன்ஸி மறக்காதீர்கள்..! " பிஜேபி அரசியல் சார்பற்றவற்றவர்களோடு நான் அன்னந்தண்ணி புழங்க மாட்டேன்.. அவங்களை பிளாக் பண்ணுவேன். சம்பந்தமே இல்லைன்னாலும், மத்யமர் குரூப்லேந்து வெளிய வந்துட்டு அதைப் பதிவிடுவேன்..! அந்த குரூப்ல இருப்பவர்களை, குறிப்பாய் பெண்மணிகளை, பயமுறுத்தி வெளியே வரச் சொல்லுவேன்..!" என்றெல்லாம் இதுகாறும் செய்த பைத்தியக்காரத் தனத்தையெல்லாம் விடுங்கள்..!
ஆரோக்கியமாக விவாதம் செய்யும் மனதோடு, sense of humourரோடு, விட்டுக் கொடுக்காத நட்போடு, அடிப்படை மனித டீசன்ஸி, வயதுக்கு மரியாதை போன்றவற்றைக் கணமும் மறக்காமல், நார்மல் மனிதர்களாக சோசியல் மீடியாவில் நடந்து கொள்ளுங்கள் என்று மோடியே உங்களுக்குச் சொல்கிறார்..! ப்ளீஸ், பிஜேபி ஆதரவு நண்பர்களே, அவர் சொல்வதையாவது கேளுங்கள்..!