For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் டிக்டாக் செயலுக்கு தடை அமலானது; பிளே ஸ்டோரிலும் கிடைக்காது!

05:58 AM Jan 20, 2025 IST | admin
அமெரிக்காவில் டிக்டாக் செயலுக்கு தடை அமலானது  பிளே ஸ்டோரிலும் கிடைக்காது
Advertisement

மெரிக்காவில் சுமார் 170 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்த செயலி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் செய்திகளின் ஸ்க்ரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், “மன்னிக்கவும். இனி டிக்டாக் செயலி கிடைக்காது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதும், டிக் டாக் செயலியை மீண்டும் கொண்டுவருவதற்கான தீர்வில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறியிருப்பது எங்களின் அதிர்ஷ்டம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூகுள் மற்றும் ஆப்பிள் 'ஆப் ஸ்டோர்களில்' இருந்தும் டிக்டாக் நீக்கப்பட்டதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டிக்டாக்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தில் வீடியோக்கள் தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement

டிக் டாக் செயலியை உருவாக்கிய `பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சீனாவைச் சேர்ந்தவர். இதனால், டிக் டாக் செயலியால் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்தது.இதைத் தொடர்ந்து, டிக் டாக் செயலிக்கான உரிமையை வேறு நிறுவனத்திற்குப் பைட் டான்ஸ் நிறுவனம் கைமாற்றவில்லை என்றால், ஜன.19 முதல் அமெரிக்காவில் டிக் டாக்கைத் தடை செய்யும் வகையிலான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில், டிக் டாக் செயலிக்கான உரிமையை பைட் டான்ஸ் நிறுவனம் கைமாற்றவில்லை என்பதை ஒட்டி அமெரிக்க அரசு விதித்த தடை இன்று அமலுக்கு வந்தது. இதனால், தங்களின் கைப்பேசிகளில் டிக் டாக் செயலியை இன்று (ஜன.19) பயன்படுத்த முனையும் அமெரிக்கர்களுக்கு ஒரு செய்தி காட்டப்படுகிறது. அதில், `டிக் டாக் தற்போது பயன்பாட்டில் இல்லை. டிக் டாக்கை தடை செய்யும் வகையிலான சட்டம் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் துரதிஷ்டவசமாக தற்போது உங்களால் டிக் டாக்கைப் பயன்படுத்த முடியாது.பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிர்ஷடவசமாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காத்திருங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement