இந்த குவைத் மினி இந்தியா போல் உள்ளது-பிரதமர் மோடி!
குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.இதையடுத்து, குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தனர். குவைத் மன்னரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். ‘அரேபிய வளைகுடா கோப்பையின் துவக்க விழாவின் போது, குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்தது மகிழ்ச்சி’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குவைத்துக்கு சென்ற பிரதமருக்கு விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குவைத் சிட்டியில் உள்ள விடுதிக்கு வந்த பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அப்போது, ராமாயணம் மற்றும் மகாபாரத நூல்களை அரபு மொழியில் பிரதமர் மோடி வெளியிட்டார். அரபு மொழியில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மொழிபெயர்த்தவர்களை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்ட அவர், குவைத்தில் உள்ள இந்தியர்களைப் பார்க்கும்போது, மினி இந்தியாவுக்கு வந்ததுபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.அதனைத் தொடர்ந்து, குவைத் சிட்டியில் கல்ப் ஸ்பிக் தொழிலாளர் முகாமில் இந்தியர்களை சந்தித்து உரையாடிய பின், அவர்களுடன் உணவு அருந்தினார்.
தொடர்ந்து அல் அப்துல்லா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு 4 மணி நேரமே என்றாலும், ஒரு இந்திய பிரதமராக குவைத் வருவதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டிருப்பதாக கூறினார். குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும் என்றும் உறுதியளித்த பிரதமர் மோடி, குவைத் வளர்ச்சிக்கு தேவையான மனிதவளமும், திறனும் தொழில்நுட்பமும் இந்தியாவிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குள்ள ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்று இந்திய தொழிலாளர்களுடன் கலைந்துரையாடினார். அப்போது, நாட்டுக்கு அவர்கள் அளித்து வரும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி பேசும் போது,"நான் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 பற்றி பேசுகிறேன். ஏனென்றால், வேலைக்காக இங்கு வந்துள்ள எனது நாட்டின் தொழிலாளர் சகோதரர்கள், அவர்களுடைய சொந்த கிராமத்தில் எவ்வாறு ஒரு சர்வதேச விமானநிலையத்தை உருவாக்குவது என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை தான் நமது நாட்டின் பலம். நமது விவசாயிகள் எவ்வளவு கடினமாக வயல்களிலும், பணியிடங்களிலும் வேலை செய்கிறார்கள் என நாள் முழுவதும் நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களுடைய கடின உழைப்பு என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களின் கடின உழைப்பை நான் பார்க்கும் போது, அவர்கள் 10 மணி நேரம் வேலை செய்தால் நான் 11 மணி நேரமும், அவர்கள் 11 மணி நேரம் வேலை செய்தால் நான் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.
நீங்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்தினருக்காக கடினமாக உழைக்கிறேன். எனது குடும்பத்தில் 140 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் நான் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும்.இந்தியவில் இப்போது மிகவும் மலிவு விலையில் இணைத் தரவுகள் கிடைக்கின்றன. உலகின் எந்த மூலைக்கோ அல்லது இந்தியாவுக்குள்ளேயோ மிகக்குறைந்த செலவில் நாம் இப்போது ஆன்லைனில் பேச முடியும். நீங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் பேசினாலும் அதற்கான செலவும் மிகவும் குறைவு. மக்கள் தினமும் அவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவது மிகப்பெரிய வசதியாக உள்ளது." என்று தெரிவித்தார்.