தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இளையராஜா ஆண்டாள் கோயிலில் அவமானப்படுத்தப்பட்டார் என்ற பரப்புரையின் பின்னணி இதுதான்!

05:51 AM Dec 17, 2024 IST | admin
Advertisement

நேற்று காலையில் ஆளுங்கட்சியின் சூரிய தொலைக்காட்சிதான் இந்த கேவலமான வேலையை ஆரம்பித்து வைத்தது என்று நினைக்கிறேன்.. காணொளியைப் பார்த்ததும், ``என்ன.. இளையராஜவை அவமானப்படுத்திட்டானுங்களா..” என்று கொதிப்பு எல்லோருக்கும் வந்ததுபோல் எனக்கும் வந்தது. சமூக ஊடகங்கள் முழுக்க இதுதான் சாக்கு என்று ராம்சாமியார் பக்தகோடிகளும் திருட்டுத் திராவிடக் கூட்டமும் ``இளையராஜாவுக்கு இது தேவைதான்..” ``இவரு எதுக்கு அங்க போகணும்.. என்னதான் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்கு வெளியேதான் நிற்கணும்” என்று விதவிதமாக ரைட்டப் எழுதிக் கொண்டிருந்தன.. திருட்டுத் திராவிடக் கூட்டத்தின் ``இந்த நேர்த்தியில் ஏதோ தப்பா இருக்கே..” என்று பாபநாசம் காவல் அதிகாரி போல் எனக்கும் சந்தேகம் வந்தது. அதனால் உடனே ஏதும் எழுதாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை என் சந்தேகத்திற்கான பதிலை, ``என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.” என்று பதிவிட்டு இளையராஜா அவர்கள் தெளிவு படுத்திவிட்டார். அதோடு சிங்கிL காலம் செய்தியாக வந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவரின் கைது செய்தியும் இந்த வதந்தி செய்திக்குப் பின் உள்ள அரசியலை புரிய வைத்தது.

Advertisement

அதாகப்பட்டது என்னவென்றால், `சனாதனத்தை டெங்கு கொசுபோல் ஒழிப்போம் என்று தேர்தலுக்கு முன் வாய்ச்சவடால் விட்டாரே நம்ம திராவிட இளவரசர்.. அந்த இளவரசர் பிராமண தோசத்தைப் போக்க ரகசியமாக ஜீயர்களை அழைத்து வந்து அவர்கள் கால்களில் விழுந்து காலைக் கழுவி பாவ விமோசனம் தேடிக் கொண்டார் என்ற தகவலை ஆடியோ ஆதாரத்துடன் காணொளியாக வெளியிட்டவர் தான் இந்த கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன். எப்பேர்பட்ட பிரேக்கிங் நியூஸ் அது.. ஆனால் திராவிட முற்போக்குக் கூட்டம் ஒன்றும் அது குறித்து மூச்சு விடவில்லை. அந்த ரங்கராஜன் கைது செய்தியையும் மடை மாற்றணும்.. இளையராஜாவையும் ஜீயர்களையும் விவாதப்பொருளாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிளப்பிவிடப்பட்ட வதந்திதான் இன்றைய இளையராஜா வெளியேற்றம் செய்திகள்.

Advertisement

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்றைய நிகழ்வு இளையராஜா இசையமைத்துப் பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரி. இதன் சிறப்பு அழைப்பாளரே இளையராஜாதான். அதற்காக ராஜாவுக்கு அத்தனை சிறப்புகளையும் மரியாதையும் ஜீயர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் செய்த காட்சிகள் இருக்கின்றன. ராஜாவின் வரவால் கோவிலில் ஏகப்பட்ட கூட்டம்.. கருவறைக்குள் பூசை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையால் இட நெருக்கடி வேறு. அந்த இடத்தில் பூசை செய்பவர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்பது எதார்த்தமானது. ராஜா கவனக்குறைவாகவோ கூட்ட நெரிச்சலில் அழைத்து சென்றவர்களோடு நகர்ந்ததாலோ உள்ளே போயிருக்கிறார். அதைச் சுட்டிக்காட்டியும் படிக்கட்டில் நிற்காமல் முந்தய இடத்தில் நிற்கச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின் பரிவட்டமும் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுதான் நடந்திருக்கிறது.

இளையராஜா கவனிக்காமல் உள்ளேச் சென்றுவிட்டு பின் வெளியே வந்த காட்சி கிடைத்ததும்.. திராவிட ஊடகத்திற்கு குஷியாகிவிட்டது. இளையராஜா அவமானப்படுத்தப்பட்டார் என்று `உச்’ கொட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த `உச்’க்குள் ஒளிந்திருப்பது அக்கறை அல்ல.. ராஜா மீதான் வன்மம். திராவிடக் கூட்டத்திற்கு இளையராஜா மீது பாசமெல்லாம் கிடையாது... இந்த செய்தியைக் காட்டி இளையராஜாவை அசிங்கப்படுத்துவதுதான் நோக்கம்.

உதாரணமாக சமீபத்தில் செத்துப்போன இளங்கோவன், ராஜாவை சாதி ரீதியாக இழிவு படுத்தி பேசியபோதும், அதை வீரமணி கைத்தட்டி ரசித்தபோதும் இந்த கூட்டத்திற்கு இப்போது வரும் கோபம் ஏன் வரவில்லை.. ! காரணம், திராவிட பண்ணையார் தனத்திடம்.. சொல்லுங்க சாமி.. என்று ராஜா போய் நிற்காமல் ராஜா ராஜாவாக திமிராக இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ராம்சாமியார் படத்திற்கு இசை அமைக்காமல் மறுத்தது வேறு அவர்களுக்கு பம்ஸில் மிளகாய் தேய்த்ததுபோல் நீண்டகாலமாக உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கிறது. அதனால் இளையராஜாவை வைத்து ஏதாவது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதேப்போல் ஏற்கனவே மோடி புத்தகத்திற்கு அணிந்துரை எழுதி விட்டார் என்று அழுகாச்சி நாடகம் நடத்தினார்கள்.. அதையெல்லாம் ராஜா பொருட்படுத்தாமல் துப்பிவிட்டு போய்விடுகிறார்.

சரி.. ஒரு வாதத்திற்காக ஜீயர்களால் ராஜா அவமானப்படுத்தப்பட்டதாகவே வைத்துக் கொள்வோம்.. சாதி ஒழிப்பு.. சமூகநீதி.. பெரியார் கொள்கை ஆட்சி.. திராவிட மாடல் என்றெல்லாம் நான்கு நாட்களுக்கு முன் வைக்கத்தில் போய் சீன் போட்ட திராவிட மாடல் அரசு என்ன செய்திருக்க வேண்டும்..? கோவில் அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ``இந்த மண்ணின் மைந்தன்.. எங்களின் பெருமைக்குரிய இளையராஜாவை எப்படி அவமானப்படுத்தலாம்.. இதை வேடிக்கைப் பார்க்க முடியாது..!இது பெரியார் மண்.. திராவிட மாடல் ஆட்சி.. நீங்க வாங்க ராஜா.. எவன் தடுத்துருவான் பார்த்துருவோம்” என்று தானே புரட்சி செய்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு இளையராஜா ஏன் கோவிலுக்கு போகிறார் என்று நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் திராவிடர்கள். ஏம்ப்பா.. திருட்டுத் திராவிடர்களே.. உங்க சாதி ஒழிப்பெல்லாம் கேரளாவின் வைக்கம் எல்லை வரைதானா.. தமிழ்நாட்டுக்குள் நுழையாதா..

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருப்பது நீங்கள்.. பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கும் அநீதிகள் நீக்கப்பட வேண்டும் என்றுதானே தமிழர்கள் உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.. அதைச் செய்யாமல் என்ன புடுங்கிக் கொண்டிருக்கிறது உங்கள் திராவிடம்..! அப்புறம் என்னமோ இளையராஜவை மட்டும் கருவறைக்குள் விடாததுபோலவும்.. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், தயாநிதி மாறன், சேகர்பாபு , டி.ஆர்.பாலு, துரைமுருகன் உட்பட திராவிட மாடலின் அதிகார மையத்தின் ஆட்கள் உட்பட அனைத்து சாதியினரும் தினமும் எல்லா கோவில் கருவறைக்குள்ளும் போய் உருண்டு புரண்டுட்டா வர்றாங்க.. !உண்மை என்னவென்றால் கருவறைக்குள் அங்கு பணி புரியும் ஊழியர்களைத் தவிர பிற பிராமணர்கள் கூட அனுமதிக்கபட மாட்டார்கள். இளையராஜாவின் இசை உருவாக்க அறைக்குள் அனைவரும் போக முடியாததுபோல்.

கோயில்கள் தமிழர்களின் சொத்து. நம் மன்னர்களாலும் முன்னோர்களாலும் கட்டப்பட்டவை. அன்று கோவில்கள் பூசகர்களாக இருந்தவர்கள் ராஜாவின் சமூகத்தவர்கள் உள்ளிட்ட தமிழ் குடியினர்தான். விஜயநகரக் கூட்டம் வந்து அவர்களை அப்புறப்படுத்தி தங்கள் ஆட்களை உள்ளே நுழைத்து செய்த தீவினைகளே இன்றைய நிலைக்கு காரணம். கோயில்கள் என்பது மன்னர்கள் காலத்திலிருந்து அதிகார மையங்களாக இருக்கின்றன.. அப்படி அரசனோடு நெருக்கமாக இருக்கக் கூடிய அதிகாரப் பதவியை அனுபவித்த எவருக்கும் எளிதில் விட்டுக் கொடுக்க மனம் வராது.. அது சொந்த பிராமணச் சாதிக்காரனாக இருந்தாலும் அதுதான் என்பதுதான் எதார்த்தம். நான் பூசை செய்தால் என் இடத்தில் என் பையன் வர வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால் பிறப்பால் கிடைக்கும் இந்த அதிகாரம், ஜனநாயக ஆட்சி நடைபெறும் இந்த காலத்தில் மாற்றப்பட்டு அந்த பணிக்கு என்ன கல்வித் தகுதியோ அதை படித்தவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அதில் அவர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் என்பதுதான் சரியான நீதி.. அதை அரசுகள் தான் செய்ய வேண்டும். அதை செய்ய துப்பில்லாதவர்கள் இளையராஜாவுக்கு பாடம் எடுக்கக் கூடாது.. !வேண்டுமானால் கமுக்கமாக ஜீயர்களை அழைத்து வந்து அவர்கள் காலை கழுவிவிட்ட உங்கள் திராவிட மாடலுக்கு பாடம் நடத்துங்கள்.. !

டாட்.

-கார்ட்டூனிஸ்ட் பாலா

Tags :
Aandal Temple!humiliatedillaiyarajakovilprotocalTempleஆண்டாள் கோயில்இளையராஜாஸ்ரீ வில்லிபுத்தூர்
Advertisement
Next Article