தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும்!

09:26 AM Apr 28, 2024 IST | admin
Advertisement

லக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பிடே (FIDE - International Chess Federation) அறிவித்துள்ளது. செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச ஏலத் தொகையாக சுமார் ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்தப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சார்பில் குகேஷ் - சீன வீரர் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இதனிடையே, மொத்தம் 25 நாள் நடக்கவுள்ள இப்போட்டிக்கு பட்ஜெட் ரூ. 71 கோடி, தவிர 'பிடே' அமைப்புக்கு ரூ.9 கோடி கட்டணம் என மொத்தம் ரூ. 80 கோடி வரை தேவைப்படுவதாக 'பிடே' தெரிவித்துள்ளது. முன்னதாக இதற்கான ஏலத்தில் பங்கேற்க, மே 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 1ல் போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்படும். உலக சாம்பியன்ஷிப் மொத்த பரிசுத் தொகை ரூ. 17 கோடியில் (2023) இருந்து ரூ. 21 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

அண்மையில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார். அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஷிப் தொடருககன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
china playerFIDEGukeshInternational Chess FederationNovember 20th to December 15thseriesThe World Chess Championship
Advertisement
Next Article