தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சீனப் பெருஞ்சுவரில் நீளமான ஓவியத்தை உருவாக்கி கின்னஸ் சாதனைப் படைத்த பெண்மணி!

07:29 PM Jan 13, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு.மலைகளுக்கிடையே மிகவும் உறுதியாகவும் நீளமாகவும் சற்றே அகலமாகவும் கட்டப்பட்ட சீனப்பெருஞ்சுவர், நன்கு படித்து கட்டுமானக் கலை அறிந்த எஞ்சினியர்களால் கட்டப்பட்டது இல்லை என்பது விசித்திர உண்மை. எங்கிருந்து பார்த்தாலும் இதன் நீண்ட அமைப்பு பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரிவது போல் எழுப்பப்பட்டிருக்கும் இந்தப் பெருஞ்சுவரின் வரலாறு சுவாரஸ்யமானது.

Advertisement

சீனாவின் மலைகளுக்கு இடையே நீண்டதொரு ரிப்பனைப் பிடித்ததுபோல் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவர் அந்நியப் படையெடுப்பை சீனாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்கிற பாதுகாப்பு நோக்கத்தில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு அதிசயம். உலகின் தனித்துவமான ஒரு கட்டுமான அதிசயமாகக் கருதப்படுகிறது இது. வாழ்நாளில் ஒருமுறையாவது இதை நேரில் கண்டு தரிசிக்க வேண்டும் என உலகெங்கிலுமிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

Advertisement

சீனாவுக்கு வரும் உலகத் தலைவர்களுக்கு சீனா மிகுந்த பெருமிதத்துடன் இதைச் சுற்றிக் காட்டுகிறது. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தச் சுவர் ஒரேயடியாக நீளமாகவே கட்டப்படவில்லை. துண்டு துண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பிறகு மெதுவாக ஒன்று சேர்க்கப்பட்டன. ஆனால் கட்டிட வேலை மட்டும் நிற்கவே இல்லை. இந்தப் பெருஞ்சுவரின் நீளம் 2,500 கி.மீ.யிலிருந்து 7500 கி.மீ வரை இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் தற்போது 21,190 கிலோமீட்டர் நீளம் உள்ளது என புதிய தகவல்கள் சொல்கின்றன. ஆனால் இதுவும் இன்னும் இறுதியானதாகக் குறிப்பிடப்படவில்லை. கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருக்கும் ஷாஸ்கால்குயான் என்னும் இடத்தில் இருந்து தக்லாம்கான் பாலைவன ஓரம் வரை இந்தச் சுவர் நீண்டு கிடக்கிறது. சீனப் பெருஞ்சுவர் மிக நீளமானது மட்டுமல்ல, மிகவும் பழமையானதும் கூட. அதாவது, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது இச்சுவர். ஆனால் இந்தச் சுவர் பயத்தின் காரணமாகவே எழுந்தது என்பதுதான் உண்மை.

தற்போது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் 7 அதிசயங்களுள் முதன்மையானது. இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், எந்திரங்கள் பயன்பாடு அறவே இல்லாத அந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மனிதர்கள் உழைப்பை பயன்படுத்தி கட்டப்பட்டது. இந்த சுவரின் கட்டுமானப்பணிகள் கி.மு. 3-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். அவரது குறிப்பிடத்தக்க சாதனை கின்னஸ் உலக சாதனைகளில் (GWR) ஒரு விரும்பத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. குவோ ஃபெங், சீனப் பெருஞ்சுவரின் மேல் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக பிரமிக்க வைக்கும் தனது கலைப் படைப்பை 1,014-மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் வரைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். குவோ ஃபெங்கின் இணையற்ற இந்த சாதனையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது.

Tags :
(traditional ChineseGreat Wall of ChinaGuinness Recordlongest wallWall.
Advertisement
Next Article