தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

காலமான முஷாரப்பின் மரண தண்டணையை உறுதி செய்தது பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்!

08:34 PM Jan 11, 2024 IST | admin
Advertisement

பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கலைத்து பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை அவர் முடக்கினார். நெருக்கடி நிலையை முஷாரப் அறிவித்தார். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவர் நிறுத்திவைத்தார்.

Advertisement

இது தொடர்பாக நடைபெற்று வந்த தேசத்துரோக வழக்கில் முஷாரபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.ஆனால், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய  சுப்ரீம் கோர்ட் அமர்வு, லாகூர் ஐகோர்ட்  அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது.

Advertisement

இந்த நிலையில் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப் (வயது 79), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2023 பிப்ரவரி 5-ந்தேதி காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
lateMusharraf!PakistanSupreme Courtupheld the death sentence
Advertisement
Next Article