தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கோடுகள் சொல்லும் `ஒதுங்கிச் செல்லுங்க` ரகசியம்!

06:52 PM Dec 17, 2023 IST | admin
Advertisement

தாவது விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டால், ‘காலம் செய்த கோலம் இது’ என்று, ஆறுதல் கூறுவோம். நாம் விரும்புவதுபோல் ஒரு காரியம் முழுமையடையாமல் அரைகுறையாக நின்றுவிட்டால் அதை ‘அலங்கோலம்’ என்று விமர்சிப்போம்

Advertisement

அதே சமயம் நேர்க் கோடுகள் கம்பீரமானவை. வளைகோடுகள் அழகானவை. நேர் ரோடுகள் கடிவாளக் குதிரைகள். வளைரோடுகள் 360 டிகிரியில் தேடல் குணம் கொண்டவை. அனுபவம் தரக் கூடியவை. வண்ணங்களாய் வளைந்து விரியும் வானவில்லும், நெளிந்து இழையும் கருங்குழலும். சுழித்து நெளிந்தோடும் நதியும் அழகானவை. அந்த வகையில் நேர்க்கோட்டுக் கோலங்களை விட வளைகோட்டுக் கோலங்களான பின்னல் கோலம், சந்துப் புள்ளிக் கோலம், நெளிக்கோலம், சங்கிலி கோலம் போன்றவை அழகூட்டுபவை. பெண்கள் பலரது தேர்வாகவும் இவையே அமைகின்றன.

Advertisement

நிமிர்ந்து நிற்கும் மூங்கில்கள் முறிவதுண்டு. ஆனால், வளைந்து கொடுக்கும் நாணல்கள் மீண்டும் நிமிர்ந்து நிற்கின்றன. வாழ்க்கையில் நெளிவு, சுளிவுகள் அறிந்து வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற தத்துவத்தைப் போதித்து கால, காலமாய் காலடிகளில் தினமும் மிதிபடுகின்றன இந்தப் புள்ளிச் சித்திரங்கள்.

ஆம்.. புள்ளிக்கோலங்கள் நமது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகின்றன. புள்ளிகள் வைப்பது என்பது நாம் காரியங்களை செய்ய திட்டமிடுவது. அதில் கோடுகள் போட்டு இணைப்பது, அந்த திட்டங்களை செயல்படுத்துவது. அதனால்தான் சில செயல்களை செய்ய மற்றவர்களை தூண்டும்போது, ‘புள்ளி பிசகாமல் செய்’ என்று கூறுகிறோம்.

புள்ளிவைக்கும் இடத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கோலம் கோணலாகிவிடும். நினைவாற்றல் திறனை மேம்படுத்துவதோடு கவனச்சிதறலை கட்டுப்படுத்தும் ஆற்றல் புள்ளி கோலத்திற்குதான் இருக்கிறது.

நம் கலாசாரத்தின் பழமையினைப் பகரும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம்.புள்ளி வைத்து போடும் கோலத்தில் புள்ளிகளைச் சுற்றி இணைத்தல், புள்ளிகளை இணைத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. புள்ளி வைத்து போடும் கோலங்களுக்கு தென்னிந்தியா பிரபலம் என்றால், புள்ளிகள் இல்லாமல் வளைவுகளை மட்டுமே ஒன்று சேர்க்கும் ரங்கோலி வகை கோலங்கள் வட இந்தியாவில் பிரபலம்.

அந்த கோலமோ அல்லது இந்த கோலமோ நம் மன ஒருமைப்பாடு, கலை உணர்ச்சி, பல்வேறுவகை சிக்கல்களுக்குத் தீர்வுகாணும்திறம், …அழகுணர்ச்சி, பொறுமை, கணக்கிடுந்திறம்..இன்னோரன்னவற்றை வளர்க்கும்.

இதுவும் ஒருவகை உடற்பயிற்சியாகவும்..யோகா ஆகவும் விளங்கும்.

அரிசி மாக் கோலம் எறும்புகளுக்குத் தீனியாகும். காஞ்சி மகாமுனிவரின் கூற்றுக்கு ஏற்ப தினமும் சஹஸ்ரபோஜனம் செய்வித்துப் புண்ணியம் கூடப் பெறலாம்.

வீட்டுக்கு வருபவர்களின் கண்கவரும் வண்ணம் கோலம் போடுவதால் அவர்கள் மனவிகாரங்கள் மறைந்து மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைவர் இதனால் நேர்மறை எண்ண அலைகள் வீட்டில் நிறையப் பெறும்.

எதிர்மறைஎண்ணங்களோடு எவரேனும் வந்தால்கூட அதையும் மாற்றும் சக்தி கோலத்துக்கு உண்டு. திருஷ்டியை உண்டாக்கும் எண்ணங்கள் மறையும் என்ற பொருளிலும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறாமை எண்ணங்களை வலுவிழக்கச் செய்யும் என்றும் இதனைக் கூறலாம்.

எல்லா வீடுகளின் முன்னும் கோலங்கள் இடப்பட்டு இருந்தால் அந்தத் தெருவே அழகாகும்.

லக்ஷ்மீகரமாகவும் விளங்கும்.

அப்படி எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை.. அவற்றிடம் நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. எனவே தெருவில் கோலங்களைப் பார்த்தால் அவற்றிற்கு நன்றி செலுத்தும் பொருட்டாவது ஒதுங்கிச் செல்வோம்.!

பெ. கருணாகரன்

Tags :
KolamLinespointrice flourtraditionaltraditional decorative art
Advertisement
Next Article