தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அதே சீனா : அப்போது கொரோனா : இப்போது நிமோனியா- ஹாஸ்பிட்டல்களில் அலைமோதும் கூட்டதால் பீதி!- அறிக்கைக் கேட்கிறது WHO!

01:49 PM Nov 23, 2023 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் கொரோனா என்ற வைரஸ் நோயை பரப்பிய சீனா தற்போது மீண்டும் ஒரு நோய் பிடியில் சிக்கி உள்ளது. சீனாவில் தற்போது குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் குழந்தைகள் இடையே நிமோனியா காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எதனால் இந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நோய் பரவுவதைக் கண்காணிக்கும் ஒரு நிறுவனமான ProMed சீனாவில் பரவும் இந்த நிமோனியா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயின் முதல் மற்றும் மிகப்பெரிய அறிகுறி அதிக காய்ச்சல் என்றும் இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் அதிகமான குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது சீனாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருங்கி வருவதால் இந்த நிமோனியாவால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமபடுகின்றன. தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரி கடந்த 12-ஆம் தேதி செய்தியாளர் மாநாட்டை நடத்தி சீனாவில் சுவாச நோய் பற்றிய தகவலை வழங்கினார். இந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த சிறப்பு அறிகுறியும் காட்டவில்லை, ஆனால் அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறினார்.

சீனாவில் நிமோனியாவால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் சீனாவில் உள்ள மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தான் இந்த தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கை கேட்ட உலக சுகாதார அமைப்பு (WHO):

இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, மைக்கோபிளாஸ்மா நிமோனியா இன்னும் பிற தொற்றுகள் ஆகியனவற்றின் தொடர்பான கூடுதல் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் குழந்தைகள் இடையே நிமோனியா காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எதனால் இந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளையும், சோதனைகளை முன்னெடுக்க உள்ளோம். மேலும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.aanthaireporter.in/wp-content/uploads/2023/11/2juAqlJd-daIJ6fr.mp4

’’சுவாச நோய் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வீட்டிலேயே இருப்பது. பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை பெறுதல். பொருத்தமான முகக்கவசம் அணிதல். நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும். அடிக்கடி கைகளை கழுவுதல்’’ போன்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். தற்போது பரவும் இந்த மர்ம நிமோனியாவால் உலக நாடுகள் பீதியில் உள்ளது.

Tags :
a reportChinacoronadue to crowdingHospitalspanicPneumoniaProMedwho
Advertisement
Next Article