கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னை பெரிசில்லை..!
அவசர அவசரமாக திறக்கிறார்கள்.. நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று சொன்னோம். வழக்கம்போல எதிராளிகளை 'நடுநிலை குமார்கள்' என்று சொல்லி கழுவி ஊத்தும் பிரகஸ்பதிகள், ஆய் ஊய் என்று குதித்தார்கள்..கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாறி ஒரு பேருந்து நிலையத்தை உலகத்திலேயே காண முடியாது என்று ஏகப்பட்ட ரைட் அப்புகள்.ஆனால் மறந்தும், 'பேருந்து நிலையப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதில் அவ்வளவு பெரிய பாடு இருக்கிறது' என்று புலம்புவது உட்பட பாதிக்கப்பட்டவர்கள் போடும் பதிவுகள் பக்கம் போகவே மாட்டேன் என்கிறார்கள்.
கிளாம்பாகத்தை விடுங்கள். ஆப்ட்ரால் ஒரு, ஆம்னி பஸ் கோஷ்டியை ஒன்றும் செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் எதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கிறது என்றே புரியவில்லை. டோல்கேட்டில் எல்லாம் பயணிகளை ஆம்னி பேருந்துகள் ஏற்றி இறக்கலாம் என்று அனுமதி கொடுக்கிறார்கள்.வாகனங்கள் வேகமாக கடக்க வேண்டிய ஒரு இடத்தை பேருந்து நிறுத்தும் இடமாக மாற்றினால், அந்த இடத்தில் எவ்வளவு கூட்டம் சேரும் அப்புறம் அடிப்படை வசதிகள் பற்றிய பிரச்சினைகள் முளைக்காதா என்றெல்லாம் கேள்விகளே தோன்றவில்லை போல.
கிளாம்பாக்கம் பற்றிக் கேட்டால் கலைஞரின் பெயரை சூட்டியதற்காக எல்லோரும் பிரச்சினை கிளப்புகிறார்கள் என்கிறார்கள். பெயர்கள் பொதுமக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்று பார்த்தால் பெயர் சூட்டும் வைபவமே சீரியஸாக பார்க்கத் தோணாது.அரை நூற்றாண்டு கடந்தும் இன்னும் சென்னை அண்ணா சாலை பலருக்கும் மவுண்ட் ரோடுதான்.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்தான்.. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் தான்.. இந்த சப்ஜெக்ட்க்கெல்லாம் அரசியலுக்கு மட்டுமே உதவும்
கிளாம்பாக்கம் புதியநிலையத்தை பொருத்தவரை, பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றைப் புள்ளியில் ஒவ்வொரு பிரச்சனையும் உடனடியாக தீர்க்கக் கூடிய அனுபவம் வாய்ந்த மிக மூத்த ஒருவரை போடாமல் ஆளாளுக்கு கச்சேரி பாடிக்கொண்டிருக்கிறார்கள்..
தமிழக மக்கள் தொகையையும் ஒட்டுமொத்த பிரச்சனையையும் பார்க்கும்போது மற்ற மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வந்து போகிறவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் பிரச்சனைகளும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல.
ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே தூக்கி பேசக்கூடிய அளவுக்கு பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.!