For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நாடு முழுவதும் காலியாக இருந்த கவர்னர்கள் பதவியிடங்களை நிரப்பி ஜனாதிபதி உத்தரவு!

10:23 AM Jul 28, 2024 IST | admin
நாடு முழுவதும் காலியாக இருந்த கவர்னர்கள் பதவியிடங்களை நிரப்பி ஜனாதிபதி உத்தரவு
Advertisement

மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான அரசு 3வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் காலியாக இருந்த கவர்னர்கள் பதவியிடங்களை நிரப்பியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதன் படி,

மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன்

Advertisement

புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ்

தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா

ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர்

பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா

சத்தீஸ்கர் - ராமன் தேகா

மேகாலயா - விஜயசங்கர்

ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார்

தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா

அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு)

சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர்

இதே போல பஞ்சாப் கவர்னனராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தின் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் அதனை ஜனாதிபதி ஏற்று புதிய கவர்னரை நியமித்துள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் புதிய கவனர் தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிகாலம் நீடிக்கப்படும் என கூறப்படுகிறது.

அது சரி பாண்டிசேரி கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் கைலாசநாதன் யார்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கே கைலாசநாதன்.குஜராத் கேடர் 1979 ஆவது ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

1953 ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் பிறந்த குனியில் கைலாஷ்நாதன் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்

குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றிய கைலாசநாதன் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் கருதப்படுகிறார்.

ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் 11 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் கைலாசநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது அவரது திறமைக்கு சான்றாக கருதப்படுகிறது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி அவர் முதல்வரின் தலைமை முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement