For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புதுயுகம் தொலைக்காட்சியில் என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும்!

05:55 PM Jun 22, 2024 IST | admin
புதுயுகம் தொலைக்காட்சியில் என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும்
Advertisement

மிழ் திரை உலகின் வெற்றி பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அதில் காலத்தின் விசித்திரமாய் சாதனைப் படைத்த இருவரின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருகின்றன. கவிஞர் கண்னதாசனும் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையுலகின் சாகாவரம் பெற்ற சகாப்தங்கள். நாணம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, சாந்தம், வியப்பு, கருணை, கோபம், வீரம், காதல், மகிழ்ச்சி, அன்பு, சோகம், பாசம், பரவசம், பிறப்பு, இறப்பு, தாய்மை, தனிமை, நட்பு, போட்டி, எழுச்சி, நாட்டுப்பற்று, நையாண்டி என மனித உணர்வுகள் அனைத்தையும் தனது பாடல்களில் பிரதிபலித்தவர்கள். பலவிதமான கதைக் களங்களை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களுக்கு தங்களின் பாடல்கள் மூலம் உயிரூட்டியவர்கள். அப்படியாக கண்ணதாசனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றிய படங்கள் மற்றும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. அந்த வகையில் தமிழ் திரையுலகை ஆண்ட இரு பெரும் சிகரங்களை கொண்டாடும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சி நடத்தி இருக்கிறது.

Advertisement

ஆம்.. இப்போது எத்தனையோ இசைக்கலைஞர்கள் வந்தாலும், எத்தனை பாடல்களை கேட்டாலும், இன்றும் என்றும் ரசிக்கக்கூடிய மறக்க முடியாத இசைக் காவியங்களை படைத்த எம்எஸ்வியும் கண்ணதாசனும் தமிழ் திரை இசையின் இரு கண்கள் என்றால் அது மிகையல்ல.அபடி தனது மெட்டுக்களால் இன்றளவும் ரசிகர்களை தாலாட்டிக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னரை பற்றியும் வரிகளால் வாழ்க்கை தத்துவம் அனைத்தையும் நமக்கு அளித்த கவியரசர் கண்ணதாசனை பற்றியும் புகழ் பாடும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியைத்தான் நமது புதுயுகம் அரங்கேற்றி இருக்கிறது..

Advertisement

இதில் சிறப்பு விருந்தினர்களாக கவியரசர் கண்ணதாசனின் புதல்வர் திரு. அண்ணாதுரை கண்ணதாசன், பாடலாசிரியர்.திரு. கலைக்குமார், கவியரசர் பற்றியும் மெல்லிசை மன்னரை பற்றியும் திறனாய்வு செய்த திருமதி. பானுமதி அவர்கள் மற்றும் கவியரசரோடும் மெல்லிசை மன்னரோடும் 17 ஆண்டுகளுக்கு மேல் பயணித்த அவருடைய சிஷ்யன் என்று அழைக்கப்படும் பாடகர் அனந்து ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் பாடல்களை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் அனுபவங்களோடு தாங்கள் ரசித்த மெல்லிசை மன்னரை பற்றியும் கவியரசர் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளனர் இதில் உரையாடலோடு பல இனிமையான பாடல்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியோடு திவ்யா ஃபிலிம்ஸ் சொக்கலிங்கம் ஒருங்கிணைத்து இருக்கிறார்.

‘‘என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும்” என்ற இந்த நிகழ்ச்சி நாளை ஜூன் 23 ஞாயிறு காலை 10 மணிக்கும் ஜூன் 24 திங்கள் இரவு 10 மணிக்கும், இருவரின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது

Tags :
Advertisement